Nagaland Elections 2023: தேர்தலுக்காக மக்களுக்கு பரிசுப்பொருட்கள் பட்டுவாடா.. ஒரேநாளில் ரூ.30,71,47,188 மதிப்புள்ள பொருட்கள் அதிரடி பறிமுதல்..!
நாகலாந்து மாநிலத்தில் தேர்தல் பறக்கும்படை நடத்திய சோதனையில் பணம், போதைப்பொருட்கள், பரிசுப்பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 07: நாகலாந்து (Nagaland) மாநிலத்தில் 2023 சட்டப்பேரவை தேர்தல் (Nagaland Assembly Election) பிப்ரவரி 27-ல் நடைபெறவுள்ளது. இதற்காக அங்குள்ள அரசியல் (Nagaland Political Parties) கட்சியினர் முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில், தேர்தல் ஆணையமும் (Election Commission) தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் மக்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு தனிப்படை (Nagaland enforcement agencies / Flying Squad) அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று நடந்த ஒரேநாள் சோதனையில் ரூ.30,71,47,188 கோடி மதிப்பிலான ரொக்கம், & இலவச பொருட்கள், போதைப்பொருள் போன்றவை கைப்பற்றப்பட்டன என அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். Wedding Ceremony Death: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 23 வயது இளைஞர் சுட்டுக்கொலை.. கண்ணீரில் குமுறும் உறவினர்கள்.!