Acid Attack to Dog: மரித்துப்போன மனிதம்; பூனைகளை தொந்தரவு செய்த நாய் மீது ஆசிட் வீசி தாக்குதல்; 35 வயது இளம்பெண் அதிர்ச்சி செயல்.!
தான் ஆசையாக வளர்க்கும் பூனைக்கு நாய் இடையூறாக இருக்கிறது என நினைத்த இளம்பெண், அதன் மீது ஆசிட் ஊற்றிய பயங்கரம் நடந்துள்ளது.

ஆகஸ்ட் 18, மும்பை (Mumbai News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, மலாய், மால்வாணி பகுதியில் உள்ள ஸ்வப்னபூர்த்தி அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த குடியிருப்பில் வசித்து வரும் பெண்மணி பலசாஹெப் துக்காராம் பகத் (வயது 53). இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
இவரின் பக்கத்து வீட்டில் 35 வயதுடைய பெண்மணி சபிஸ்தா சுஹைல் அன்சாரி. இவர் தனது வீட்டில் பூனைகளை வளர்த்து வந்துள்ளார். இந்த பூனைகளை துக்காராமின் நாய் அவ்வப்போது தொந்தரவு செய்து வந்ததாக தெரியவருகிறது. Chennai Sub Urban Train: சென்னை புறநகர் இரயில் ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல்; இரயிலை இயக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு.!
இந்த விஷயம் தொடர்பாக இருவீட்டாருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற 35 வயது இளம்பெண், தனது பக்கத்து வீட்டில் இருக்கும் நாயின் மீது ஆசிட் ஊற்றி இருக்கிறார்.
ஆசிட் ஊற்றப்பட்ட சம்பவம் கடந்த 16ம் தேதி நடந்தது. இந்த சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதனால் வீடியோ ஆதாரத்துடன் நாயின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், அதிகாரிகள் இளம்பெண்ணுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)