Son Dig Well: தண்ணீருக்காக நெடுந்தூரம் நடந்த தாய்.. கிணறு வெட்டி குடும்பத்துக்கே விடியல் கொடுத்த 14 வயது மகன்.! நெகிழ்ச்சி நிகழ்வு.!
விடாமுயற்சி கட்டாயம் வெற்றியை தரும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது இந்த சிறுவனின் முயற்சி.
மே 23, பால்கர் (Maharashtra News): விடாமுயற்சி கட்டாயம் வெற்றியை தரும் என்பதற்கு உதாரணமாக அமைத்துள்ள இந்த செய்தித்தொகுப்பு. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டம் (Palghar), கெலவே அருகேயுள்ள தவங்க படா கிராமத்தை சேர்ந்தவர் விநாயக் சல்கார் (Vinayak Salkar).
இவரின் மனைவி தர்ஷனா. தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் 14 வயதுடைய பிரணவ் சல்கார் (Pranav Salkar) என்ற மகன் இருக்கிறார். தர்ஷனா மற்றும் விநாயக் ஆகியோர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர். இவர்களின் கிராமம் பின்தங்கிய கிராமம் என்பதால், அடிப்படையான குடிநீர் வசதிகள் கூட சரிவர இல்லை.
இதனால் தினமும் வீடு உபயோகத்திற்கு தேவையான நீரை நெடுந்தூரம் சென்று தர்ஷனா சேகரிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். தனது தாய் தினமும் நீருக்காக நெடுந்தூரம் பயணிப்பதை கண்டு ப்ரணவ்-வின் மனம் வெம்பியுள்ளது. Bangalore Rain Death: மழைநீர் கால்வாயில் அலட்சியம்; தண்ணீரின் வேகத்தை பார்க்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சோகம்.!
இதனையடுத்து, தனக்கு சொந்தமான நிலத்திலேயே தந்தையின் உதவியுடன் சிறுகச்சிறுக கிணறு வெட்ட தொடங்கிய பிரணவ், இறுதியில் தண்ணீரையும் கிணற்றில் கண்டுள்ளார். இதனால் ப்ரணவின் குடும்பத்தினரே பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தங்களின் நேரம் மிச்சமாகும் என்றும், அந்த நேரத்தில் வேறொரு பணியை கூடுதலாக செய்து குடும்பத்திற்காக உழைப்போம் என்றும் ப்ரணவின் பெற்றோர்கள் தெரிவிகின்றனர்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/WATCH?src=hash&ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Palghar, Maharashtra: Distressed upon seeing his mother walk every day in the sun to fetch water for the house, 14-year-old Pranav Salkar dug a well in his front yard with the help of his father. The family lives in Dhavange Pada near Kelve. Pranav's parents, Darshana… <a href="https://t.co/H5WzkbzGIs">pic.twitter.com/H5WzkbzGIs</a></p>— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1660836388982652929?ref_src=twsrc%5Etfw">May 23, 2023</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>