Mallikarjun Kharge on Adani issue: மத்திய அரசின் சாமர்த்திய செயல்.. கொந்தளிக்கும் எதிர்க்கட்சி தலைவர்.. பரபரப்பு பேட்டி.!
அதானி விவகாரம் விவாதமாக்கப்படக்கூடாது என்பதற்காக, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அது தொடர்பான விவகாரங்களை தவிர்த்து வருகிறது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
பிப்ரவரி 06, டெல்லி: உலகளவில் 4 ஆவது பெரிய செல்வந்தர்களுள் ஒருவராக இருந்து வந்த அதானி (Adani), தனது மதிப்புகளில் ஏற்பட்ட பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு பின்னர் படிப்படியாக பட்டியலில் இறங்குமுகம் கண்டு வருகிறார். பங்குகளில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யவும், மேற்படி இழப்புகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அவர் மூலமாக முதலீடு செய்யப்பட்ட எல்.ஐ.சி (LIC) பங்குகள் என்ன ஆனது? என பலரும் கதிகலங்கி இருக்கின்றனர்.
இதற்கிடையில், பாராளுமன்றத்தில் (Parliament) கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பட்ஜெட் (Union Budget 2023-24) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பிற கேள்வி நேரங்கள் என டெல்லி அரசியல் (Delhi) வட்டாரமே பரபரப்புடன் இருந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் அதானியின் விவகாரத்தை கையில் எடுத்து கடுமையான வாதங்களை முன்வைத்து வருகின்றனர். Salem Rowdy Killed: நள்ளிரவில் நடுரோட்டில் ரௌடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை.. காரில் பின்தொடர்ந்து நடந்த பயங்கரம்.!
இந்த நிலையில், இன்றைய நாளில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (Congress President Mallikarjun Kharge), நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் (Adani Issue) தொடர்பாக கேள்வி எழுப்புவோம், இவ்வுளவு பெரிய விவகாரத்தில் மத்திய அரசு (Central Govt) அமைதியாக இருந்து வருகிறது. எங்களது சம்மன் மீது நாங்கள் விவாதம் தொடர்பான வாதத்தை முன்வைக்கிறோம்.
நாங்கள் விரிவான விவாதத்திற்கு தயாராக இருப்பதால், அதனை முதலில் எடுத்து எங்களுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என விரும்புகிறோம். தற்போதைய நிலைமையில் எங்களின் பிரச்சனைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். அதானி விவகாரம் விவாதமாக்கப்படக்கூடாது என அரசு இருக்கிறது. அதனாலே அவர்கள் அதானி விவகாரத்தை தவிர்க்க விரும்புகிறார்கள்" என்று பேசினார்.