Worker Shot Dead: புலம்பெயர்ந்த தொழிலாளி தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை.. தொடரும் சோக சம்பவம்..!

ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளி தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Indian Army and Jammu Kashmir Police (Photo Credit: @KashmirViews9 X)

அக்டோபர் 18, ஸ்ரீநகர் (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீரில் சோபியான் (Shopian) மாவட்டத்தில் பீகாரில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளி ஒருவர் தீவிரவாதிகளால் (Terrorists) சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று (அக்டோபர் 18) காயங்களுடன் இருந்த தொழிலாளியின் உடலை, சாலையோரத்தில் இருந்து உள்ளூர்வாசிகள் மீட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். Jammu Kashmir: ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து.. உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்!

இதுகுறித்த தகவலின்பேரில், சம்பவம் நடந்த பகுதிக்கு இந்திய ராணுவத்தினரும் (Indian Army), ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரும் உடனடியாக விரைந்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக தெரிவிக்கையில், ஜம்மு காஷ்மீரைச் சேராதவர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படுவது அப்பகுதியில் கவலைக்குரிய செய்தியாக மாறி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியூரைச் சேர்ந்த 2 புலம்பெயர் தொழிலாளிகள் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும், இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், தீவிரவாதிகளால் கட்டத்தப்பட்ட ராணுவ வீரரின் உடல் குண்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாக அக்டோபர் 09-ஆம் தேதி காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.