WhatsApp Scam Call Alert: வாட்சப் வழியாக புதிய மோசடி; மக்களே கவனமாக இருங்க... மத்திய அரசு எச்சரிக்கை..!

அறியாமை என்ற வார்த்தையை பயன்படுத்தி நவீன யுகத்தில் மக்கள் இழந்த விஷயங்கள் ஏராளம். பணத்தில் தொடங்கி தனிநபரின் நம்பிக்கை முதல் ஒவ்வொரு விஷயமும் இன்று கேள்விக்குறியாகி வருகிறது.

WhatsApp (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 09, புதுடெல்லி (New Delhi): தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சியில் இந்தியா தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறது. மக்களின் அறியாமை மற்றும் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் நபர்களின் செயல்களால் ஏற்படும் குற்றச்செயல்கள் தொடருகின்றன. இதனை தீவிரமாக தடுத்து, மக்களை மோசடிகளில் இருந்து காப்பாற்ற மத்திய அரசின் (Govt of India) தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

மோசடி அழைப்புகள் பலவிதம்: இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்புத்துறை அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாட்சப்பில் (WhatsApp Scam) வரும் மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக பெறப்படும் அழைப்புகளில் பேசுவோர், உங்களின் செல்போன் எண் இணைப்பு துண்டிக்கப்படும், செல்போன் நம்பரை தவறான வழியில் பயன்படுத்துவதால் அபராதம் விதிக்கப்போகிறோம், குறைந்த வட்டியில் அதிக கடன் என்று மோசடி வலைகளை விரிக்கின்றனர். UFO Spotted on Texas: சூரிய கிரகணத்தின்போது அதிர்ச்சி; பறக்கும் தட்டுகளை நேரில் கண்ட மக்கள்.. உலாவிய ஏலியன்.! 

காவல்நிலையத்தில் சைபர் கிரைம் (Cyber Crime Complaint India) பிரிவில் புகார் அளியுங்கள்: இவர்களின் வலையில் விழுந்து சிக்குவோரின் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் அரசின் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. சில நேரம் மக்களும் அறியாமை காரணமாக தங்களின் பணத்தை இழக்கும் வாய்ப்புகள் உள்ளாகின்றன. இவ்வாறான மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில், இணையவழி குற்றப்பிரிவில் புகார் அளிக்க விடும்.

பணம் இழக்கதோர் புகார் அளிக்க செய்ய வேண்டியது: பணத்தை இழந்தோர் பணம் இழைக்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் புகார் அளித்தால், அதனை மீட்பதற்கு 75% வாய்ப்புகளும் உண்டு. ஒருவேளை மோசடி அழைப்புகளை மட்டும் பெற்றால் www.sancharsathi.gov.in என்ற அரசின் இணையத்தில் புகார் அளிக்கவேண்டும். அதில் புகார் அளித்தால், அரசு மேற்படி நமக்கு வந்த அழைப்பு விபரத்தை கொண்டு மோசடியாளர்களை கண்டறியும், அவர்கைளன் செயல்பாடுகளை தடுக்கும்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement