Woman Stabs 50 times: கண்களை பிடுங்கி, 50 முறை உடலில் சரமாரியாக வெட்டி 21 வயது இளம்பெண் கொடூர கொலை: தலைநகரையே நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!

திரைப்படங்களில் காண்பிக்கப்படும் சைக்கோ போல, காதலுக்கு உடன்பட மறுத்த தோழியை இளைஞர் கொடூரமாக கொலை செய்த பதைபதைப்பு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

Knife Murder | Women Sad Both File Pics (Photo Credit: @ItsKhan_Saba X / Pixabay)

ஜனவரி 30, புதுடெல்லி (Delhi Crime News): புதுடெல்லியில் உள்ள சாகூர் பாஸ்டி (Shakur Basti) பகுதியில் 21 வயது இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டவாறு, கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக சடலமாக கிடந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை இரயில்வே தண்டவாளங்களுக்கு அருகே மதியம் 01:30 மணி அளவில் மீட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

கண்கள் பிடிங்கி எடுக்கப்பட்டு கொடூர கொலை: மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனை முடிவில், பெண்ணின் உடலில் 50 இடங்களில் மொத்தமாக வெட்டு காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. உடலில் வெட்டுகள் இல்லாத பாகங்களே இல்லை என்ற அளவில் கொடூரமாக பெண் கொலை செய்யப்பட்டிருந்தார். மேலும், அவரது இரண்டு கண்களும் உடலில் இருந்து பிடுங்கி எடுக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, தனிப்படை அமைத்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். Marriage Off Due to Chair: நாற்காலிக்காக தொடங்கிய சண்டையில் திருமணம் நிறுத்தம்; துயரத்தில் மணமக்கள்.! 

நேரில் சந்தித்து ஒருதலைக் காதல்: விசாரணையில், பெண்ணை கொலை செய்தது அங்குள்ள புத் விகார் பகுதியைச் சார்ந்த பாண்டவ் குமார் என்ற 21 வயதுடைய இளைஞர் என்பதை உறுதி செய்தனர். இவர் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். தனது தங்கும் அறையில் இருந்து இவர் தப்பிச் செல்ல முயன்ற போது, தனிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடந்த விசாரணையில், பீகாரில் நடைபெற்ற சகோதரியின் திருமணத்திற்கு வந்திருந்த பெண்ணை நேரில் சந்தித்து காதல் வயப்பட்ட நபர், பெண்ணுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பழகி வந்துள்ளார்.

Rape & Murder (Photo Credit: Pixabay)

தோழியின் மீது நடத்தை சந்தேகம்: இவர்கள் இருவரும் காதலர்கள் இல்லை என்றாலும், குமார் மட்டும் ஒருதலையாக அவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே தான் உன்னை காதலிக்கிறேன் என்றும், இருவரும் சேர்ந்து வாழ்க்கையை தொடங்கலாம் என்றும் குமார் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பெண்மணி மறுப்பு தெரிவித்துள்ளார். அனைவரிடமும் இயல்பாக பேசும் குணம்கொண்ட பெண்மணி, நட்புடன் பலரிடமும் பழகி வந்துள்ளார். இது குமாருக்கு தெரியவந்து, அவர் ஒருதலைகாதலியின் மீது நடத்தை சந்தேகம் அடைந்துள்ளார். Google Map Gone Wrong: வேலையை காண்பித்த கூகுள்; மேப்பை நம்பி படிக்கட்டு வழியே பயணம்..! ஊட்டியில் ஷாக் சம்பவம்.! 

விபரீத முடிவெடுத்த இளைஞர்: சம்பவத்தன்று தனது காதலுக்கு ஒத்துழைத்தால் அவள் உயிரோடு இருக்க வேண்டும், இல்லையேல் மரணிக்க வேண்டும் என்ற விபரீத முடிவை எடுத்த குமார், இறுதியாக பெண்ணை உன்னை தனியாக சந்தித்து பேச வேண்டும் என்று அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள இரயில்வே யார்ட் பகுதியில் இருக்கும் தனிமையான இடத்திற்கு பெண்ணை அழைத்துச் சென்றவர், தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார். அதற்கு பெண்மணி மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

நடுநடுங்க வைக்கும் கொலை சம்பவம்: தான் மறைத்து எடுத்துச் சென்ற கத்தியை எடுத்து பெண்ணின் உடலில் சரமாரியாக குத்தி கிழித்த கொடூரன், ஆத்திரம் தீராது 50 முறை சரியாக உடல் பாகங்களில் வெட்டி இருக்கிறார். மேலும், அவரது இரண்டு கண்களையும் பிடுங்கி எடுத்து கொலை செய்துள்ளார். பின் உடலை அங்கேயே விட்டுவிட்டு எதுவும் தெரியாதது போல வந்துள்ளார். தான் தங்கியிருக்கும் அறையில் உள்ள பொருட்களை எடுத்து செல்ல முற்பட்டபோது, அவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement