Marriage Chair Arrangements (Photo Credit: Pixabay)

ஜனவரி 30, புலந்த்சாஹர் (Uttar Pradesh News): உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்தசாகர் மாவட்டத்தில், தம்பதிகளுக்கு திருமணம் நடத்த பெற்றோர்களால் விறுவிறுப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக நிச்சயம் செய்யப்பட்டு, இரு தரப்பிலும் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருமண நாளை எண்ணி மணப்பெண் - மணமகன் காத்திருந்து இருக்கின்றனர். அதற்கான முந்தைய கொன்னுட்டங்களும் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றுள்ளன. நேற்று திருமண நிகழ்ச்சி கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில், மணமகனின் பாட்டிக்கு கூட்ட நெரிசலால் உட்கார நாற்காலி கிடைக்கவில்லை என்று தெரியவருகிறது. இதனால் அவர் தனது பேரன் (மணமகனிடம்), உட்கார நாற்காலி கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். Google Map Gone Wrong: வேலையை காண்பித்த கூகுள்; மேப்பை நம்பி படிக்கட்டு வழியே பயணம்..! ஊட்டியில் ஷாக் சம்பவம்.! 

Divorce | Marriage  File Pics (Photo Credit: Pixabay)

செய்கையால் நடந்த சம்பவம்: இது தொடர்பாக அங்கு இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த மணப்பெண் தரப்பில் ஒருவர் உட்கார இடம் கிடைக்கவில்லை என இவ்வளவு பிரச்சனையா? என்று கூறி இழிவாக பேசி, செய்கையில் காரி துப்புவது போல பாவனையை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனையடுத்து, இருதரப்பு அடிதடி வராத பாக்கியாக கடுமையான வாக்குவாதம் செய்துள்ளது.

செலவு தொகையை கொடுத்துவிட்டு வந்த மணமகன் தரப்பு: ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த மணமகன் தான் திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறார். பின் மணமகள் தரப்பில் மணமகன் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இறுதியில் மணமகன் திருமணத்தை நிறுத்த முன்வந்தால், பெண் தரப்பில் செலவழிக்கப்பட்ட தொகையில் மண்டப வாடகை உட்பட அனைத்தையும் வாங்கிவிட்டு அங்கிருந்து மணமகன் தரப்பு அனுப்பி வைக்கப்பட்டது.