Women's Naked Dead Body Found: 55 வயது பெண் முட்புதரில் சடலமாக மீட்பு; பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா..? நடந்தது என்ன..?

சத்தீஸ்கரில் 55 வயது பெண் அரை நிர்வாணமாக, முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Murder (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 17, ஜாஞ்ச்கிர்-சம்பா (Chhattisgarh News): சத்தீஸ்கர் மாநிலம்,  ஜாஞ்ச்கிர்-சம்பா (Janjgir–Champa) மாவட்டத்தில் அகல்தாரா காவல்நிலைய பகுதியில் அரை நிர்வாணமாக 55 வயதுடைய பெண்ணின் சடலம் முட்புதரில் கிடந்துள்ளது. அந்தப் பெண்ணின் அந்தரங்கப் பகுதியில் மரக் குச்சிகள் சொருகிய நிலையில் இருந்துள்ளது.  Trending Video: கொடிமரத்தின் உச்சியில் சிக்கிக்கொண்ட தேசியக்கொடியை சரிசெய்த பறவை; வியக்க வைக்கும் வீடியோ வைரல்.!

இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மதுவுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகின்றது. இதுதொடர்பாக, அந்த பெண் முதலில் பாலியல் பலாத்காரம் (Rape) செய்யப்பட்டு பின்னர் கொடூரமாக கொலை (Murder) செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று இரவு 8 மணியளவில் ஏதோ வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்ற அவர், இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை என அப்பகுதியினர் தெரிவித்தனர். மறுநாள் (ஆகஸ்ட் 16) அவரது வீட்டின் அருகே உள்ள புதர்களில் இருந்து அவரது அரை நிர்வாண உடலை மீட்டனர். இதனிடையே, கடைசியாக சந்தேகப்படும்படி அவருடன் சென்ற வாலிபர் ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement