Youth Trapped In Concrete Mixing Machine Dies: அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் கொலை; தமிழக வாலிபர் கைது..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
கேரளாவில் கான்கிரீட் கலவை எந்திரத்தில் சிக்கி பலியான அசாம் இளைஞர் பலியான சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மே 03, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டம், வக்தனம் பகுதியில் தனியார் கான்கிரீட் ஆலை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த பாண்டிதுரை (வயது 29) என்பவர் கான்கிரீட் கலவை எந்திரத்தை (Concrete Mixing Machine) இயக்குபவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடன், அசாம் மாநிலத்தை சேர்ந்த லைமென் கிஸ்க் (வயது 19) என்ற வாலிபரும் வேலை பார்த்து வந்தார். Carrot Kheer Recipe: சத்தான கேரட் கீர் செய்வது எப்படி..! விவரம் உள்ளே..!
இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதி அன்று லைமென் கிஸ்க் கான்கிரீட் எந்திரத்திற்குள் இறங்கி சுத்தம் செய்துள்ளார். இதனை கவனிக்காமல் பாண்டிதுரை எந்திரத்தை இயக்கியுள்ளார். இதில், உள்ளே இருந்த லைமென் கிஸ்க் உடல் நசுங்கி இறந்துவிட்டார். இதனையடுத்து, உயிரிழந்து கிடந்த அவரது உடலை கண்டறிந்து எடுத்துச் சென்று குப்பையில் வீசிவிட்டு, அதன்மேல் கான்கிரீட் கலவையை கொட்டியுள்ளார்.
இதன்பின்னர், இரண்டு நாட்கள் கழித்து உயிரிழந்த அவரின் உடலை சக ஊழியர்கள் கண்டுபிடித்தனர். மேலும், இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், விரைந்த வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், தமிழகத்தை சேர்ந்த பாண்டிதுரை என்பவர், லைமென் கிஸ்க் எந்திரம் உள்ளே இருப்பதை கவனிக்காமல் இயக்கியதும், பின்னர் இறந்த உடலை குப்பையில் வீசிவிட்டு, கான்கிரீட் கலவையை கொட்டியதும் தெரியவந்தது. இந்த தடையங்களை மறைக்க கண்காணிப்பு கேமரா வீடியோக் காட்சிகளை அழிக்கவும் முயன்றுள்ளது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாண்டிதுரையை சிறையில் அடைத்தனர்.