CBSE 12th Results 2024: சிபிஎஸ்இ 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிப்பு; விபரம் உள்ளே.!

அதனை தெரிந்துகொள்ள எமது செய்திக்குறிப்பை தொடர்ந்து படிக்கவும்.

CBSE Alerts (Photo Credit: @airnewsalerts / @upendrrarai x)

மே 13, புதுடெல்லி (New Delhi): மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education CBSE ) சார்பில் நடத்தப்படும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று (மே 13, 2024) அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் தேர்வெழுதிய நுழைவு சான்றிதழில் பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியும் தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். Chetan Chanddrra Attacked: முகமெல்லாம் இரத்த காயம்... 20 பேர் கும்பலால் அடித்து நொறுக்கப்பட்ட பிரபல நடிகர் சேட்டன் சந்திரா.. பதறவைக்கும் விளக்கம்.! 

மதிப்பெண்களை தெரிந்துகொள்வது எப்படி? தேர்வர்கள் அரசின் cbseresults.nic.in இணையதளத்திற்கு சென்று தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விபரங்களை குறிப்பிட்டு மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம். அதனை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்தும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் விபரம்: கடந்த பிப்ரவரி மாதம் 15ல் தொடங்கி மார்ச் மாதம் 02ம் தேதி வரை இத்தேர்வுகள் நடைபெற்றன. 18,417 பள்ளிகளில் 6,759 தேர்வு மையங்களில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. தேர்வெழுதிய 1,621,224 மாணவர்களில் 1,426,420 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வெழுதிய மாணவர்களில் 87.98% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 91% ஆகும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 84.6% ஆகும். 24,000 மாணவர்கள் 95% மதிப்பெண்களும், 1.16 இலட்சம் மாணவர்கள் 90% மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.