மே 13, பெங்களூர் (Cinema News): கன்னட திரையுலதில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சேட்டன் சந்திரா (Chetan Chanddrra). கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகை ஹர்ஷிகா பூனசாவாவுடன் நடித்து வெளியான பியுசி திரைப்படத்தின் மூலமாக கன்னட திரையுலகில் அறிமுகமானவர், 2010 ஆம் ஆண்டு வெளியான ப்ரேமிஸிம் படத்தின் வாயிலாக பெருமளவு கவனிக்கப்பட்டார். மேலும், கும்ப ராசி என்ற படத்திற்காக அவர் தனது உடலை வருத்திக்கொண்டு நடித்து மிகப் பிரபலம் அடைந்தார். கன்னட திரை உலகில் வெளியாகும் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவுடன் கோவிலுக்கு சென்று இருந்தார். அதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையான நேற்று இரவு 12 மணி அளவில் பெங்களூர் நோக்கி வந்தார். Local Train Update: சிக்னல் கோளாறால் இரயில் சேவை முற்றிலும் பாதிப்பு; பயணிகள் அவதி.! 

ரத்த காயத்துடன் நியாயம் வேண்டி கோரிக்கை: அச்சமயம் பெங்களூர், ககலிப்புரா பகுதியில் வந்தபோது, இவர்களின் கார் ஒன்றை கும்பல் ஒன்று இடித்து இருக்கிறது. இதனையடுத்து, நடிகர் அந்த கும்பலிடம் தட்டி கேட்க சென்றபோது, பெண்கள் உட்பட 20 பேர் கொண்ட கும்பல் அவரை கடுமையாக தாக்கி வலிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நடிகர் தனக்கு நேர்ந்த விஷயத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். ரத்த காயத்துடன் அவர் எனக்கு நியாயம் வேண்டும் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகிய வைரலாகி வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்திலும் நடிகர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Chetan Chanddrra (@chetan_chanddrra)