Classical Language Status: இந்தியாவில் மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து.. என்னென்ன மொழிகள் தெரியுமா?!
மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழிகளுக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது.
அக்டோபர் 04, புதுடெல்லி (New Delhi): நமது இந்தியா பல்வேறு மொழிகளைக் கொண்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் ஒவ்வொரு மொழிகளைப் பேசி வருகிறார்கள். இந்த மொழிகளைக் காக்க மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் படி கடந்த அக்டோபர் 12, 2004 அன்று ‘செம்மொழிகள்’ (Classical Language) என புதிய வகை மொழிகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி 2004 ஆம் ஆண்டே முதலில் தமிழை (Tamil) செம்மொழியாக அறிவித்தது. அதன்பின் சம்ஸ்கிருதம் (2005), தெலுங்கு (2008), கன்னடம் (2008), மலையாளம் (2013) மற்றும் ஒடியா (2014) மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.
தொடர்ந்து இப்போது மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழி (Marathi, Pali, Prakrit, Assamese, and Bengali) ஆகிய மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்த நடவடிக்கையால், தற்போது இந்திய மொழிகளில் செம்மொழியாக அங்கீகாரம் பெற்ற மொழிகளின் எண்ணிக்கை 11ஐ எட்டியுள்ளது. White Gold: வெள்ளைத் தங்கம் லித்தியம் கண்டுபிடிப்பு.. பணக்கார நாடாகுமா இந்தியா?!
செம்மொழி: ஒரு மொழி செம்மொழி அந்தஸ்து பெற சில தகுதிகள் உள்ளன. அதாவது அதன் உயர் தொன்மை காட்டும் வகையில் 1,500-2,000 வருடப் பழமையான மொழியின் ஆரம்பக்கால நூல்கள், பண்டைய இலக்கியங்கள்/ நூல்களின் தொகுப்பு இருக்க வேண்டும். அறிவு நூல்கள், குறிப்பாக உரைநடை நூல்கள் கவிதை, கல்வெட்டு சான்றுகள் இருக்க வேண்டும். இவை அந்த மொழிகளின் தற்போதைய வடிவத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம்.