Delhi Air Pollution: தீபாவளி பரிதாபங்கள்! மிக மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்.. திணறும் மக்கள்.!
தலைநகர் டெல்லி காற்று மாசுவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 28, புதுடெல்லி (New Delhi): வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், டெல்லியில் தற்போது கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. அதேசமயம் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தொடங்கி ஜனவரி இறுதி வரை காற்று மாசு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது தலைநகர் டெல்லி காற்று மாசுவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேர சராசரியின்படி இன்று காலை 6 மணியளவில் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 264 என்றளவில் இருந்தது. இந்த அளவு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். Bandra Railway Station Stampede: ஒரே நேரத்தில் இரயிலில் பயணிக்க முடியடித்த கூட்டம்; கூட்ட நெரிசலால் 9 பேர் படுகாயம்.!
இதனை கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 1, 2025 வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளபோது தடையை மீறி சிலர் பட்டாசு விதிக்கலாம் என்பது மகக்ளுக்கு அச்சத்தை உண்டாக்கி உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருகிறது.
மிக மோசமான நிலையில் டெல்லி காற்றின் தரம்: