Delhi’s First Successful Bilateral Hand Transplant: டெல்லியின் முதல் முழுமையான கை மாற்று அறுவை சிகிச்சை... மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

டெல்லியின் கங்கா ராம் மருத்துவமனையில் முதல் இருதரப்பு கை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

Bilateral Hand Transplant (Photo Credit: @DDNewslive X)

மார்ச் 06, புதுடெல்லி (New Delhi): நியூ கிரீன்ஃபீல்ட்ஸ் பள்ளியின் தலைவர் மீனா மேத்தா (Meena Mehta) ஆவார். இவர்க்கு மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார். இருப்பினும் இவரது உடல் உறுப்புகள் அனைத்தும் தானம் செய்யப்பட்டு, அதன்மூலம் வாழ்ந்து வருகிறார். அதன்படி கங்கா ராம் மருத்துவமனையில் (Ganga Ram Hospital) உள்ளவர்களுக்கு சிறுநீரகம், கைகள், கல்லீரல் மற்றும் கருவிழிகள் உள்ளிட்ட மீனா மேத்தாவின் உறுப்புகள் புதிய வாழ்க்கையின் ஆதாரமாக மாறியது.

ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ஏற்பட்ட பயங்கர விபத்தில் தனது இரு கைகளையும் இழந்த டெல்லி, நங்லோயில் வசிக்கும் 45 வயதான நபர்க்கு, மேத்தாவின் கைகள் மாற்றப்பட்டது. இது ​​வட இந்தியாவின் முதல் இருதரப்பு கை மாற்று அறுவை சிகிச்சை (Bilateral Hand Transplant) ஆகும். 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நீண்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மேத்தாவின் இரண்டு கைகள் அந்த நபருக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டன. Credit Card New Rules: கிரெடிட் கார்டுக்கான புதிய விதிகள்.. இந்திய ரிசர்வ் வங்கியின் திடீர் அறிவிப்பு..!

இதுகுறித்து சர் கங்காராம் மருத்துவமனையின் தலைவர் மற்றும் பிஓஎம் டாக்டர் அஜய் ஸ்வரூப் கூறியதாவது, “கல்லீரல், சிறுநீரகம், இரு கைகள் மற்றும் கார்னியாவின் இந்த மாற்று அறுவை சிகிச்சைகளை செய்ய பல உறுப்பு மாற்று குழு 12 மணி நேரம் உழைத்தது. வட இந்தியாவில் இதுவே முதல் இருதரப்பு கை மாற்று அறுவை சிகிச்சை ஆகும். அறுவைசிகிச்சை செயல்முறையானது, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறையின் தலைவர் டாக்டர் மகேஷ் மங்கல் தலைமையிலான அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு மற்றும் டாக்டர் எஸ்எஸ் கம்பீர், டாக்டர் அனுபவ் குப்தா, டாக்டர் பீம் நந்தா மற்றும் டாக்டர் நிகில் ஜுன்ஜுன்வாலா ஆகியோர் அடங்கிய குழுவால் நடத்தப்பட்டது" என்று கூறியுள்ளார்.