Blood Donate File Pic / Expired Juice (Photo Credit : Pixabay / Youtube)

ஆகஸ்ட் 27, அவிநாசி (Coimbatore News): கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இரத்த தானம் செய்த நபருக்கு காலாவதியான ஜூஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. நேற்று கோவையைச் சேர்ந்த ஒருவர் இரத்ததானம் செய்ய வந்த நிலையில், அவருக்கு இரத்த தானத்திற்கு பின் வழங்கப்பட்ட ஜூஸை பார்த்தபோது காலாவதியாகி இருந்தது தெரியவந்துள்ளது. Gold Rate Today: தங்கப்பிரியர்களுக்கு ஷாக்.. விநாயகர் சதுர்த்தியில் ரூ.75,000-ஐ மீண்டும் கடந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்..! 

காலாவதியான ஜூஸ் :

14 நாட்கள் காலாவதியான ஜூஸை மருத்துவமனை நிர்வாகம் வழங்கியது. முதலில் இது தெரியாமல் அதனை குடித்த நபருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க கேட்டபோது அவர்கள் கட்டண விபரங்களை கூறியுள்ளனர். இதனால் ரூ.50,000 வரை செலவழிக்க வேண்டி இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. காலாவதியான ஜூஸை ஏன் கொடுத்தீர்கள் என கேட்டபோது உரிய பதிலும் இல்லை.

உரிய பதில் கொடுக்காத மருத்துவமனை நிர்வாகம் :

கோவையில் உள்ள கே.எம்.சி.ஹெச் மெயின் மருத்துவமனையில் 26-ஆம் தேதி காலை 11 மணியளவில் இரத்த தானம் செய்தவருக்கு கிட்டத்தட்ட 14 நாட்கள் காலாவதியான ஜூஸ் கொடுத்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்லை என்று சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தகவல் வைரலாகி வரும் நிலையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.