அக்டோபர் 24, நொய்டா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர் பாலேஷ்வர். இவருக்கு கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது. பிறந்த சில நாட்களேயான குழந்தைக்கு உடல்நிலை மோசமாக இருந்ததால் நொய்டாவில் உள்ள கோபால் நர்சிங் ஹோமில் பெற்றோர் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே அவரது கை முழுவதுமாக வீங்கி, நீல நிறத்தில் மாறத் தொடங்கியுள்ளது. இதனைக்கண்டு அதிர்ந்த பெற்றோர் உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்கவே, அவர்கள் சரியான முறையில் பதில் அளிக்காமல் கையில் கட்டு போட்டுவிட்டு வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.
ஊசி போட்ட பிறகு நீல நிறத்தில் மாறிய குழந்தையின் கை:
குழந்தையின் உடல் நிலையும் மோசமாக தொடங்கியதால் அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தையின் கையை பரிசோதித்த மருத்துவர்கள், கை முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அழுகும் நிலையில் இருப்பதால் கையை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து குழந்தையின் தந்தை பாலேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Andhra Bus Fire Accident: எலும்புக்கூடான ஆம்னி பேருந்து.. தீப்பிடித்து 23 பேர் உடல் கருகி பலி.. ஆந்திராவில் கண்ணீர் துயரம்...!
கையை அகற்ற வேண்டிய அவல நிலை:
இந்த புகாரின் பேரில் கோபால் நர்சிங் ஹோம் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணை குழு அமைத்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தலைமை மருத்துவ அதிகாரிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவறான ஊசி போட்டதன் காரணமாக குழந்தையின் கை அழுகும் நிலைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க பெற்றோர்கள் கவனமுடன் இருப்பது அவசியம். முடிந்தவரை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம்.
பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?
அங்கீகாரம் இல்லாத மருந்தகங்கள் அல்லது நர்சிங் ஹோம்களில் குழந்தைகளை சிகிச்சைக்காக அனுமதிக்க கூடாது. குறிப்பாக ஊசி போடும் நேரங்களில் பெற்றோர்கள் அருகில் இருந்து கவனமாக பார்த்துக்கொள்வது அவசியம். மருத்துவர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும். சிறு அலட்சியமே குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மருத்துவர்கள் அல்லது மருத்துவமனை நிர்வாகம் தவறு செய்தால் உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும்.