Bharat Rice: ஒரு கிலோ அரிசி ரூபாய் 29 மட்டுமே.. பிப்ரவரி 9ஆம் தேதி முதல் பாரத் அரிசி விற்பனை..!
மத்திய அரசின் மானிய விலை அரிசி திட்டமான பாரத் அரசி வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
பிப்ரவரி 06, புதுடெல்லி (New Delhi): இந்தியா முழுவதும் கடந்த ஓராண்டில் அரசின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்களின் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பாரத் அரிசி என்ற மானிய விலை அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி ஒரு கிலோ அரிசி ரூபாய் 29 க்கு விற்பனை செய்யப்படும். இத்திட்டமானது வரும் பிப்ரவரி ஒன்பதாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ளது. Gobi Manchurian Banned: கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு சுகாதாரத்துறை அதிரடி தடை; காரணம் என்ன?..! விபரம் இதோ.!
இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக சில்லறை சந்தை விற்பனைக்கு 5 லட்சம் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரிசி திட்டத்தின் கீழ் நாம் அரிசியை இணையம் வழியிலும் வாங்க இயலும். அரிசி பதுக்கலைத் தடுக்கவே இத்திட்டத்தினை அரசு தீவிர படுத்தியுள்ளது. மேலும் மத்திய அரசு ஏற்கனவே பாரத் கோதுமை மாவு, பாரத் பருப்பு வகைகள் என மானிய விலையில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.