Cyclone Remal Live Tracker on Windy.com: ரிமால் புயலின் நகர்வுகளை நேரடியாக கண்காணிப்பது எப்படி?.. முழு விபரம் உள்ளே.!

உங்களின் பாதுகாப்பே முக்கியம் என்பதால், புயலின் நகர்வுகளை விரைந்து தெரிந்துகொள்ளவும்.

Cyclone Remal (Photo Credit: @Indiametdept X)

மே 24, புதுடெல்லி (New Delhi): மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடகிழக்கு திசையில் இருந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை காலை மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும். புயலாக வலுவடைந்ததும், வடக்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும். பின் வங்கதேசத்தை நோக்கி நகரும் மே 26 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் வங்கதேசத்தின் சாகர் தீவு மற்றும் கோகபுரா இடையே தீவிர புயலாக இது கரையை கடக்கும். ஓமன் வழங்கிய பரிந்துரையின் பேரில், இப்புயலுக்கு ரிமால் (Cyclone Remal) என பெயரிடப்பட்டுள்ளது. Cuddalore Shocker: 17 வயது சிறுவனின் செயலால், சக்கரத்துடன் இழுத்து செல்லப்பட்ட பெண்; கடலூர் மருத்துவமனை வாசலில் நடந்த கொடூரம்.! 

புயல் நகர்வுகளை விண்ட்லியில் தெரிந்துகொள்ளுங்கள்: வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள புயலால் வானிலை இந்தியாவில் மாறியுள்ள நிலையில், புயலின் நகர்வுகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பட்சத்தில் மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்கள் மற்றும் வங்கதேசம் நாட்டின் கடற்கரையில் தனது தாக்கத்தை வெளிப்படுத்தும். பின் 26ம் தேதி மாலை அல்லது இரவில் புயல் சூறாவளியாக வங்கதேச எல்லைக்குள் புகுந்து கரையை கடக்கும். இதனால் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லவும் தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலுக்குள் சென்ற மீனவர்கள் நாடு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயலின் நகர்வுகளை நாம் நேரடியாக விண்ட்லி (Windy.com) பக்கத்திலும் காணலாம். அதற்கான நேரடி இணைப்பும் உங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.