மே 24, கடலூர் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில், கடந்த 22 ஆம் தேதி அவசர ஊர்தி ஒன்று மருத்துவமனை வாயிலில் நிறுத்தப்பட்டிருந்தது. அவசர ஊர்தியின் ஓட்டுநர், தான் அழைத்து வந்த நோயாளியை மருத்துவமனைக்கு உள்ளே அழைத்துச் சென்றிருந்தார். அச்சமயம் 17 வயது சிறுவன் ஒருவன் அவசர ஊர்தியை திடீரென இயக்கியிருக்கிறார். இந்த சம்பவத்தில் வாகனம் தறிகெட்டு இயங்கி, அங்குள்ள சுற்றுச்சுவர் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த நிலையில், வாகனத்தின் சக்கரத்தில் பெண் ஒருவர் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். மேலும், வாகனம் மோதிய இடத்தில் மற்றொரு பெண்ணும் காயமடைந்தார். Daughter Sexual Harassment Her Father: 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தந்தையின் செயலால் சிறுமியின் தாய் அதிர்ச்சி..!
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து: நொடிப் பொழுதில் நடந்த இந்த சம்பவத்தை சற்றும் எதிர்பாராத மக்கள், பதறியபடி விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, அப்பகுதியில் அவசர ஊர்திகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வந்த 17 வயது சிறுவன் நோயாளியை இறக்கிவிட்டு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை திடீரென இயக்கி விபத்துக்கு வழிவகை செய்ததும் தெரியவந்தது. இந்த சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கின்றன. ஏற்கனவே 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களுக்கு இரு சக்கர வாகனம் கொடுக்கும் பெற்றோர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்து வரும் நிலையில், தற்போது இந்த சம்பவம் ஆனது நடைபெற்றுள்ளது.
#Watch | கடலூர் அரசு மருத்துவமனையில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்சை இயக்கிய சிறுவன் - 2 பெண்கள் மீது மோதல்
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நோயாளியை இறக்கி உள்ளே அழைத்துச் சென்ற நேரத்தில், அங்கிருந்த சிறுவன் வாகனத்தில் ஏறி இயக்கியுள்ளார்
காயமடைந்த 2 பெண்களும் மருத்துவமனையில் அனுமதி#SunNews… pic.twitter.com/HFTUgwhfFm
— Sun News (@sunnewstamil) May 23, 2024