Facebook, Google, Apple Hiring In India Dropped: இனி கூகுள் பேஸ்புக் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடையாது.. இந்தியர்களுக்கு ஆப்பு..!

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்கள் பல இந்தியாவில் பணியமர்த்தலை முழுமையாக நிறுத்தப்போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

Facebook, Google, Apple Hiring (Photo Credit: @OrbView X)

டிசம்பர் 27, டெல்லி (Delhi): Xpheno என்ற நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள ஆறு பெரிய ஐடி நிறுவனங்களான, பேஸ்புக், அமேசான், ஆப்பிள், மைக்ரோசாப்ட், நெட்பிளிக்ஸ் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் சரிவு காணப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டினை ஒப்பிடும் போது 2023 ஆம் ஆண்டில் இந்த நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள், 90% இந்தியாவில் சரிவை கொண்டுள்ளன. இதனால் இந்த நிறுவனங்கள் இந்தியாவில் பணி அமர்த்தலை இடைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Director Thankar Bachchan Anger Moment: "ஒவ்வொருத்தனும் கொலைகாரன் தான்" - ஆதங்கத்தில் பொங்கிய இயக்குனர் தங்கர் பச்சான்; நடந்தது என்ன?..!

ஐடி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு நிறுத்தம்: பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த பணி அமர்த்தல் இடைநிறுத்தம் ஆனது, அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு தொடரும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பொருளாதாரம் மந்த நிலை காரணமாக பல ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து பணியாள்களை வேலையில் இருந்து நீக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவில் சிறிது நாட்களுக்கு ஐடி நிறுவனங்களில் வேலை வாங்குவது கடினமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.