Pilgrims Bus Terror Attack in JK: ஜம்மு காஷ்மீரில் யாத்திரீக்கள் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 10 பேர் பலி?..! பிரதமர் பதவியேற்பு விழா அன்று பயங்கரம்.!

பயணிகள் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளதாக ஜம்மு காஷ்மீரில் இருந்து தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

JK Terror Attack on 9 June 2024 (Photo Credit: @OSINTJK X)

ஜூன் 09, ரெய்சி (Jammu Kashmir News): இந்திய பிரதமராக நரேந்திர மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக இன்று பதவியேற்கிறார். டெல்லியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் உள்நாடு, வெளிநாடு என சிறப்பு விருந்தினர்களாக 8000 பேர் கலந்துகொண்டுள்ளனர். இதனால் இந்திய அளவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்: இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள ரைசி மாவட்டத்தில், யாத்ரீகர்களுடன் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாதிகள் பகிரங்கமாக துப்பாக்கிசூடு நடத்தி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. PM Narendra Modi's Oath: "நரேந்திர மோடி எனும் நான்" மோடி மந்திரம் அதிர., பிரதமராக பதவிப்பிரமாணம் செய்தார் நரேந்திர மோடி.! 

விபரங்கள் காத்திருக்கின்றன: இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளின் நிலை என்ன? பயங்கரவாத தாக்குதல் நடத்திய கும்பல் யார்? உயிர்ப்பலி எண்ணிக்கை ஏற்பட்டுள்ளதா? என்ற எந்த விபரமும் இல்லை. மேற்படி விபரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. நிகழ்விடத்திற்கு மீட்பு குழுவினர் மற்றும் பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர்.

தற்போது வரை இவ்விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. மேற்படி விபரங்கள் அதிகாரபூர்வ தகவலுக்காக காத்திருக்கின்றன..

10 பேரை பலி கொண்ட தாக்குதல்?: