Alekan Falls: அருவியில் குளித்த சுற்றுலாப்பயணிகளின் உடைகளை தூக்கி வந்து அலறவிட்ட காவல்துறை; காரணம் என்ன?.!
அதனை மீறி செயல்பட்ட சுற்றுலாப்பயணிகளுக்கு பாடம் கற்பித்த காவல்துறை, அவர்களின் செயல்முறையால் எதிர்ப்பை சந்தித்துள்ளனர்.
ஜூலை 13, பெங்களூர் (Karnataka News): தென்மேற்கு பருவமழையானது (Southwest Monsoon) தொடங்கியுள்ள காரணத்தால், இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி (Western Ghats) மலைகளில் அமைந்துள்ள மாநிலங்கள் மற்றும் வடக்கு, வடகிழக்கு மாநிலங்கள் நல்ல மழையை சந்தித்து வருகிறது. பல மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்கள் அவ்வப்போது பெய்யும் கனமழை காரணமாக வெள்ளத்திலும் மிதக்கின்றன. நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிவதால், அதன் வழித்தடங்களில் உள்ள மக்கள் கவனத்துடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல அருவிகளில் ஆட்பறித்து நீர் கொட்டி வருவதால், மக்கள் குளிக்கவும் உள்ளூர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைமீது அமைந்துள்ள மாநிலங்களில் கர்நாடகாவும் கவனிக்கத்தக்கது. Rajinikanth Dance on Anant - Radhika Wedding: ஆனந்த் அம்பானி - ராதிகா திருமண நிகழ்ச்சியில், மகிழ்ச்சியாக நடனமாடிய ரஜினிகாந்த்; வைரல் வீடியோ இதோ.!
தடை செய்யப்பட்ட அருவியில் ஆனந்த் குளியல்:
இங்கு தென்மேற்குப்பருவமழை காலத்தில் பெய்யும் மழை காரணமாக, மலைப்பகுதிகளில் உள்ள அருவிகளில் அதிக நீர் வெளியேறும். ஒருசில இடங்களில் மழை பருவ அருவிகளும் தோன்றும். சுற்றுலா பயணிகள் இதன் அழகை கண்டு ரசிப்பது உண்டு. உயிர்சேதம் உட்பட பிற விஷயங்களை தவிர்க்க காவல்துறையினர் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டு இருக்கும். இந்நிலையில், சிக்கமகளூரு (Chikkamagaluru) மாவட்டத்தில் உள்ள சார்மதி வனப்பகுதியில் இருக்கும் அலெகன் அருவியில் சுற்றுலா பயணிகள் சிலர் குளித்துக்கொண்டு இருந்தனர். அருவியில் நீர் வரத்து அதிகம் இருந்ததால், அங்கு குளிக்க அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டு இருந்தது. தடையை மீறி சுற்றுலா வந்த சிலர் குளித்துக்கொண்டு இருந்துள்ளனர்.
பாடம் புகட்டிய காவல்துறைக்கு எதிராக குவியும் கண்டனங்கள்:
இதனைக்கண்ட உள்ளூர் காவல்துறையினர், சுற்றுலாப்பயணிகளுக்கு பாடம் புகட்ட எண்ணி அவர்கள் கழற்றி வைத்திருந்த ஆடையை தங்களுடன் எடுத்து வந்தனர். இதனால் உள்ளாடையுடன் சாலை வரை வந்து அவர்கள் கெஞ்சி-கூத்தாடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பின் இதுபோன்ற காரியங்களில் இனி ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின் உடை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அங்கிருந்து செல்ல அறிவுறுத்தப்பட்டனர். சுற்றுலாப்பயணிகளை காவல்துறையினர் கண்டித்து கவனத்தை பெற்றாலும், அவர்களின் உடையை எடுத்து வந்தது காவல்துறையினருக்கு எதிராக கண்டனத்தை குவிக்கிறது. இந்த சம்பவத்தின் காணொளி காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகிறது.
சுற்றுலா பயணிகளை அதிகாரிகள் கண்டித்த காணொளி: