ஜூலை 13, மும்பை (Cinema News): உலக தொழிலதிபர்களில் முக்கியமானவரும், இந்திய தொழிலதிபர்களில் முதன்மை இடத்தை பெற்றவருமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani). இவரின் மனைவி நிதா அம்பானி. தம்பதிகளின் மகன் ஆனந்த் அம்பானி. இவர் தனது பாலிய காதலி ராதிகா மெர்ச்சன்ட்டை கரம்பிடிப்பதாக அறிவிக்கப்பட்டு, உலகளவில் பல பிரபலங்களும் திருமண (Anant Ambani Wedding) நிகழ்வுகளுக்கு நேரில் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த திருமண வைபோவம் அனைத்தும் மும்பை ரிலையன்ஸ் ஜியோ சென்டரில் வைத்து நடைபெறுகிறது. Samsung Galaxy Ring: "ஸ்மார்ட் வாட்ச்-க்கு விடுதலை" - புதிய பரிணாமத்துடன் களமிறங்கும் சாம்சங் கேலக்சி ஸ்மார்ட் மோதிரம்.. அசத்தல் விபரம் இதோ.!
திருமண விழாவில் குவிந்த பிரபலங்கள்:
நிச்சயதார்த்தம், திருமண கொண்டாட்டங்கள் என உலகமே வியக்கும் வண்ணம் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஜூலை 12ம் தேதியான நேற்று திருமணம் நடைபெறுவதை தொடர்ந்து, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் இருந்து பிரபலங்கள் வந்து குவிந்தனர். தமிழ்நாடு திரையுலகை சேர்ந்த ரஜினிகாந்த், சூர்யா உட்பட பலரும் தங்களின் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். ஹாலிவுட் நடிகை கியா, குத்துச்சண்டை வீரர் ஜான் சீனா, பாலிவுட் திரை பிரபலங்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், ரன்பீர் கபூர், தேசிய அளவிலான அரசியல்கட்சி பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். Anant Ambani-Radhika Merchant Wedding: அம்பானி இல்லத் திருமண விழாவில் பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் செனா: வாழ்த்து மழை பொழிய குவியும் பிரபலங்கள்.!
நடனமாடிய ரஜினிகாந்த்:
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் (Rajinikanth) ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் () தம்பதியின் திருமண விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவின்போது, இசைக்கச்சேரி மற்றும் நடன நிகழ்ச்சியில் பலரும் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் நடனமாடி மகிழ்ந்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
#WATCH | Actor Rajinikanth shakes a leg at Anant Ambani-Radhika Merchant's wedding ceremony in Mumbai pic.twitter.com/uCmBzRIYF0
— ANI (@ANI) July 12, 2024