IPL Auction 2025 Live

Temple Wall Collapse: கோவிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் பரிதாப பலி; நெஞ்சை உலுக்கும் சோகம்.!

இந்த துயரத்தில் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Sagar Tempe Wall Collapse (Photo Credit: @yasarullah X)

ஆகஸ்ட் 04, சாகர் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் (Sagar Temple Wall Collapse) மாவட்டம், ஷாஹ்புர் கிராமத்தில் கோவில் ஒன்று உள்ளது. தென்மேற்குப்பருவமழையின் தீவிரம் சாகர் மாவட்டத்திலும் இருக்கும் நிலையில், கடந்த சில வாரங்களாகவே அங்கு நல்ல மழை பெய்து வருகிறது. இதனிடையே, தொடர் மழையின் கர்ணாம்க ஷாஹ்புர் கிராமத்தில் உள்ள கோவில் வளாகத்தின் சுற்றுச்சுவர் வலுவிழந்து காணப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான இன்று விடுமுறை நாளில், அப்பகுதியை சேர்ந்த சிறார்கள் குழு கோவில் வளாகத்தை ஒட்டிய சுற்றுச்சுவர் அருகே இருந்தது. அச்சமயம் திடீரென சுவர் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 10 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட 9 சிறார்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயத்துடன் அலறித்துடித்தனர். Yamini Krishnamurthy: மண்ணுலகை விட்டு மறைந்தார் பரதநாட்டிய புகழ் யாமினி கிருஷ்ணமூர்த்தி.! 

மாவட்ட ஆட்சியர் தகவல்:

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உயிரிழந்த சிறார்களின் உடலை மீட்டனர். மேலும், காயமடைந்த சிறார்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாகர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஆர்யா, "காலை 08:30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது. குழந்தைகளின் மீது கோவில் சுற்றுச்சுவர் விழுந்ததில் 9 பேர் பலியாகியுள்ளனர். 2 பேர் மருத்துவமனையில் இருக்கிறார்கள். மழையின் காரணமாக சுவர் வலுவிழந்து இன்று துயரம் நடைபெற்றுள்ளது. மீட்பு பணிகள் அனைத்தும் நிறைய்வுபெற்றது. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு அரசு உறுதுணையாக இருக்கும்" என தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.