Stop Pooja-Archana During Court Programs: நீதிமன்ற நிகழ்ச்சிகளின் போது பூஜை, அர்ச்சனையை நிறுத்த வேண்டும்... நீதிபதி அபய் எஸ் ஓகா கோரிக்கை..!
நமது அரசியலமைப்பின் முகப்புரையில் இரண்டு முக்கியமான வார்த்தைகள் உள்ளன, ஒன்று மதச்சார்பற்றது மற்றும் இரண்டாவது ஜனநாயகம் என்பதை தான் எப்போதும் உணர்ந்ததாக நீதிபதி ஓகா கூறியுள்ளார்.
மார்ச் 06, புனே (Pune): மார்ச் 3 அன்று புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட்டில் புதிய நீதிமன்ற கட்டிடத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ் ஓகா (Justice Abhay S Oka) கலந்துக் கொண்டு உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, "சில நேரங்களில் நீதிபதிகள் விரும்பத்தகாத விஷயங்களைச் சொல்ல வேண்டும். நான் கொஞ்சம் விரும்பத்தகாத ஒன்றைச் சொல்லப் போகிறேன். நீதிமன்றங்களில் நிகழ்ச்சிகளின் போது பூஜை-அர்ச்சனையை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு பதிலாக, அரசியலமைப்பின் முகப்பு படத்தை வைத்து வணங்க வேண்டும். இதற்காக ஒரு திட்டத்தை தொடங்க வேண்டும்.அரசியலமைப்பு 75 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன், அதன் கண்ணியத்தை தக்க வைத்துக் கொள்ள, இந்த புதிய நடைமுறையை நாம் தொடங்க வேண்டும்" என்று கூறியுள்ளார். Delhi’s First Successful Bilateral Hand Transplant: டெல்லியின் முதல் முழுமையான கை மாற்று அறுவை சிகிச்சை... மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..!
மேலும் பேசிய அவர், "என்னைப் பொறுத்தவரை, முன்னுரையில் உள்ள 'மதச்சார்பற்ற' மற்றும் 'ஜனநாயக' வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. அரசியலமைப்புச் சட்டம் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. டாக்டர் அம்பேத்கர், மதச்சார்பின்மையைக் குறிப்பிடும் ஒரு சிறந்த அரசியலமைப்பை நமக்கு வழங்கியுள்ளார். நமது நீதிமன்ற அமைப்பு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அது நமது அரசியலமைப்பால் நடத்தப்படுகிறது. நீதிமன்றங்கள் அரசியலமைப்பால் வழங்கப்படுகின்றன. கர்நாடகாவில் நான் இருந்தபோது, இதுபோன்ற மத நிகழ்ச்சிகளைக் குறைக்க பலமுறை முயற்சித்தேன், ஆனால் என்னால் அவற்றை முற்றிலுமாக நிறுத்த முடியவில்லை. ஆனால் 75 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பது மதச்சார்பின்மையை முன்னேற்றுவதற்கான சிறந்த சந்தர்ப்பம்" என்று கூறியுள்ளார்.