Man Choked to Death: பசியில் வேகமாக முட்டையை சாப்பிட்ட முதியவர்.. தொண்டையில் சிக்கியதால் பலியான சோகம்.!

அவசர அவசரமாக முட்டையை சாப்பிட்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man Choked to Death (Photo Credit: Pixabay)

நவம்பர் 04, நாகர் கர்னூல் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாகர் கர்னூல் மாவட்ட வட்டமோன் கிராமத்தில் வசித்து வருபவர் திருப்பத்தையா. இவருக்கு வயது 48. இவர் தனது சொந்த வேலையாக லிங்காளா கிராமத்திற்கு வந்துள்ளார். காலையில் உணவு சாப்பிடாத காரணத்தால், வேலையை முடித்துவிட்டு வரும்போது அவருக்கு அதிகம் பசி எடுத்துள்ளது. இதனால் அங்குள்ள தள்ளுவண்டி ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட முட்டை ஒன்றை வாங்கி சாப்பிட்டு இருக்கிறார். Merugu Nagarjuna: முன்னாள் அமைச்சர் மீது இளம்பெண் பாலியல் புகார்; பரபரப்பாகும் அரசியல்களம்.. அதிரும் ஆந்திரா.!

பசி மயக்கத்தில் அவர் முட்டையை முழுவதுமாக வாயில் திணித்து சாப்பிட முற்பட்டதாக தெரியவருகிறது. இதனால் முட்டை தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.