PM Narendra Modi Congratulates Manu Bhaker and Sarabjot Singh: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2-வது பதக்கம்.. வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி..!

பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

PM Narendra Modi Congratulates Manu Bhaker and Sarabjot Singh (Photo Credit: @ANI X)

ஜூலை 30, புதுடெல்லி (New Delhi): சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும் (Paris Olympics). 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் ஜூலை 26 அன்று கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரீஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இது பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 2வது பதக்கம். முன்னதாக, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் மனு பாகர், வெண்கலம் வென்று அசத்தி இருந்தார். Rohan Bopanna Retires: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்தார் ரோஹன் போபண்ணா.. டென்னிஸ் ரசிகர்கள் சோகம்..!

இவர்களை பாராட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவரது க்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "நம் துப்பாக்கி சுடும் வீரர்கள் தொடர்ந்து நம்மை பெருமைப்படுத்துகிறார்கள். ஒலிம்பிக்ஸில் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி நிகழ்வில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகர் - சரப்ஜோத் சிங் (Manu Bhaker and Sarabjot Singh) ஜோடிக்கு வாழ்த்துக்கள். இருவரும் சிறப்பான திறமையையும், குழுப்பணியையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் உள்ளது. மனுவைப் பொறுத்தவரை, இது அவரது இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் ஆகும், இது அவரது நிலையான சிறப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது" என தெரிவித்துள்ளார்.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif