PM Modi Sashtang Pranam Video: ராமர் கோயில் பிரதிஷ்டை விழா... ராமருக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்த பிரதமர் மோடி..!
ராமர் கோவில் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான பிராண பிரதிஷ்டை விழா தொடங்கியது.
ஜனவரி 22, உத்தரப்பிரதேசம் (Uttar Pradesh): உச்ச நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் தற்போது கோயில் திறப்பு விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். அயோத்தி நகரமே வண்ண மின் விளக்குகள், மலர் அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
ராமர் கோயில் பிரதிஷ்டை விழா: மங்கல இசையுடன் ராமர் கோயில் பிரதிஷ்டை விழா தொடங்கியது. இதில் நாடு முழுவதும் இருந்து வந்துள்ள பிரபல கலைஞர்கள், தமிழக பாரம்பரிய இசைக் கருவிகளான தவில், நாகஸ்வரம், மிருதங்கம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிககளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை இசைத்தனர். Viral News: கிராம மக்களின் 10 ஆண்டு ஆசை.. விமானத்தில் கோவா பறந்த மக்கள்..!
பிரதிஷ்டை விழா: அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். பெரிய தட்டில் பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்களுடன் வந்த பிரதமர் மோடி பூஜையில் அமர்ந்தார். அதனைத் தொடர்ந்து, அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி பால ராமர் சிலைக்கு முதலில் பூஜை செய்தார். ராமர் சிலை மலர்கள், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.