Viral News (Photo Credit: @backiya28 X)

ஜனவரி 22, நெல்லை (Nellai): நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே உள்ள தாட்டான்பட்டி (Thattanpatti) கிராமத்தில், சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்திலும், பீடி சுற்றும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். வாலிபர்கள் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகளிலும் சேவை புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பகுதியை சேர்ந்த ராணுவத்தில் பணியாற்றும் வாலிபர்கள் விமானத்தில் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். இதனால் தாட்டான்பட்டியில் வசிக்கும் பெண்களுக்கும் எப்படியாவது ஒரு முறையாவது விமானத்தில் பறந்து செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அதற்காக ஊர்மக்கள் அனைவரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து விமானத்தில் பறக்க திட்டமிட்டனர். CEAT Launches Sportrad, Crossrad Tyres: டூ-வீலர்களுக்கான புதிய சியட் டயர்... விற்பனைக்கு அறிமுகம்..!

அதன்படி சுமார் 10 ஆண்டுகள் சேமித்து, கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு புனித சுற்றுலாவாக விமானம் மூலமாக கோவா புறப்பட்டனர். தொடர்ந்து அங்குள்ள சவேரியாரை இன்று காலை பார்வையிட்டனர். இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 134 பேர் விமானத்தில் பறந்தனர்.