Road Accident: கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!
உத்தரகாண்ட்டில் லாரி - கார் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 12, டேராடூன் (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் (Dehradun) ஓஎன்ஜிசி சவுக் பகுதியில் நேற்று இரவு (நவம்பர் 11) லாரியும் இன்னோவா காரும் நேருக்கு நேர் மோதி (Car - Cargo Truck Accident) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயமடைந்த நிலையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Boy Dies By Dog Bite: நாய் கடித்து 2 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்..!
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சேதமடைந்த வாகனத்தில் இருந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களில், 3 பெண்கள் மற்றும் 3 வாலிபர்கள் என தெரியவந்துள்ளது. மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.