Supreme Court Judges: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆர். மகாதேவன், கோடீஸ்வர் சிங் பதவியேற்பு..!
புதிதாக பொறுப்பேற்ற 2 நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஜூலை 18, புதுடெல்லி (New Delhi): டெல்லி உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த 2 நீதிபதிகளுக்கான இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு, அரசு கொஜிலியம் மத்திய அரசுக்கும், குடியரசுத்தலைவருக்கும் அதற்கான பரிந்துரையை வழங்கி இருந்தது. அதன்பேரில், குடியரசுத்தலைவர் மற்றும் மத்திய அரசு சார்பில் கொஜிலியத்தின் பரிந்துரை சமீபத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. K Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி; அதிரடி நடவடிக்கை எடுத்த எடப்பாடி பழனிச்சாமி.!
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பேற்பு:
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த ஆர். மகாதேவன், ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி கோட்டிஸ்வர் சிங் (Justices N Kotiswar Singh & R Mahadevan) ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாக பரிந்துரை செய்யப்பட்டு இருந்தனர். அரசு கொஜிலியத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, இன்று இவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
34 நீதிபதிகள் கொண்ட குழுவில், 32 நீதிபதிகளுடன் உச்சநீதிமன்றம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது தனது முழு அளவிலான பணியாளர்களுடன் நீதிமன்றம் செயல்படவுள்ளது. இந்த நிகழ்வின்போது, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி கிருஷ்ணகுமாரும் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.