Central Govt Employees PF Schemes: பிஃஎப் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.1%.. மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு..!
மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற வருங்கால வைப்பு நிதி திட்டங்களுக்கு ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.1% வட்டி விகிதத்தை நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜூலை 04, டெல்லி (Delhi News): நிதி அமைச்சகம், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி (GPF) மற்றும் பிற வருங்கால வைப்பு நிதி திட்டங்களுக்கு 7.1% வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், '2024-2025ஆம் ஆண்டில், பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற ஒத்த நிதிகளுக்கு சந்தாதாரர்களின் வரவுகளில் 7.1% என்ற விகிதத்தில் வட்டி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 01, 2024 முதல் செப்டம்பர் 30, 2024-ஆம் ஆண்டு வரையிலும், இந்த விகிதம் அமலில் இருக்கும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Youth Death In Bike Accident: சாலையைக் கடந்து சென்ற நபர் மீது மோதிய இருச்சக்கர வாகனம்.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகள்.. வெளியான சிசிடிவி வீடியோ வைரல்..!
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.1% வட்டி விகிதங்களைப் பெறும் திட்டங்கள் பொது வருங்கால வைப்பு நிதி, பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி, அகில இந்திய சேவைகள் வருங்கால வைப்பு நிதி, மாநில ரயில்வே வருங்கால வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் இந்திய ஆயுதத் துறை வருங்கால வைப்பு நிதி ஆகும். இந்த குறிப்பிட்ட காலாண்டிற்கான சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை மத்திய அரசு மாற்றாமல், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (SCSS) 8.2 சதவீதமாகவும், தேசிய சேமிப்புச் சான்றிதழின் (NSC) வட்டி விகிதம் 7.7 சதவீதமாகவும் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.