Pongal Gift in Ration Shop 2024: பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக ரூ.500... பொதுமக்கள் மகிழ்ச்சி..!
பொங்கல் பரிசாக தொகுப்பு பொருட்களுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் ரூ.500 செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
ஜனவரி 04, புதுச்சேரி (Puducherry): தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் கடந்த 2022 ஆம் ஆண்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப்பருப்பு, கடலைப்பருப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு, இதற்கு பதிலாக பரிசு தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டும் பொங்கல் பரிசு தொகையை புதுவை அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்தாண்டு 3 லட்சத்து 53 ஆயிரத்து 249 பேருக்கு தலா 500 ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 791 சிகப்பு ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் இலவச துணிக்கு பதிலாக 1000ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. Bengaluru Tragedy: புகைப்படம் எடுக்க மறுத்த பெற்றோர்... கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு..!