IMD- Monsoon 2024 Prediction: இந்த ஆண்டு இந்தியாவில் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்?. இந்திய வானிலை மையம் தகவல்..!
நாடு முழுவதிலும் தென்மேற்கு பருவமழை எப்போது ஆரம்பமாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது.
ஜனவரி 31, புதுடெல்லி (New Delhi): 2024 ஆண்டின் வானிலையைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக இருக்கும் என்றுதான் பெரும்பாலான வானிலை ஆய்வாளர்கள் கணித்து இருக்கின்றனர். மேலும், பருவமழையும் பெரிய அளவு பொய்யாது. அதே நேரம், கூடுதலாக பெய்வதற்கு வாய்ப்புகள் குறைவு என தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இந்தாண்டுக்கான தென்மேற்கு பருவமழை தொடர்பாக முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department) வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் தென்மேற்கு பருவமழையானது ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடையும் என கணித்துள்ளனர். Mayank Agarwal Admitted In ICU: இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் ஐசியுவில் அனுமதி... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
மேலும், பிப்ரவரியில் வட இந்தியாவில் இயல்பான மழைப்பொழிவு இருக்கும். பிப்ரவரியில் வடமேற்கு, மேற்கு மத்திய மற்றும் வடகிழக்கு இந்தியாவிலும், கிழக்கு-மத்திய இந்தியாவின் சில பகுதிகளிலும், இயல்பான வெப்பநிலை விட அதிகமாக இருக்கலாம் என்றும் கணித்துள்ளனர்.