SC On Menstrual Leave: மாதவிடாய் கால விடுப்பு.. உச்ச நீதிமன்றம் சொன்ன பதில்..!

மாதவிடாய் கால விடுப்பு வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

Supreme Court of India (Photo Credit: httpsindiaai.gov.in)

ஜூலை 08, புதுடெல்லி (New Delhi): மாதவிடாய் காலங்களில் பணியிடத்தில் பெண்களுக்கு விடுப்பு (Menstrual Leave) வழங்கும் வகையில் தெளிவான கொள்கைகளை உருவாக்கக் கோரியும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். Date Palm Benefits: ஈச்சம் பழத்தின் நன்மைகள்.. அட இந்த சின்ன பழத்துல இவ்வளவு இருக்கா?!

மாதவிடாய் விடுப்பு குறித்து தொடரப்பட்ட மன அரசின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரம், இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்தார். அதோடு மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கினால், அது பணியிடங்களில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம், இது பெண்களுக்கு பாதகமாக மாறலாம் என்று கருத்து தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக மனுதாரர் பெண்கள் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடி கோரிக்கை வைக்குமாறும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.