India Canada Diplomatic Tension: இந்தியா - கனடா உறவில் விரிசல்.. காரணம் என்ன?!

கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறிவிட்டதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

Canada PM Justin Trudeau (Photo Credit: X)

அக்டோபர் 17, கனடா (World News): பஞ்சாப் மாநிலத்தை காலிஸ்தான் என்ற தனிநாடாக அங்கீகரிக்கக்கூறி, சீக்கியர்களின் ஒருதரப்பு பல ஆண்டுகளாக போராடி வருகிறது. தங்களை காலிஸ்தான் நாட்டின் ஆதரவாளர்கள் எனக்கூறி, அவர்கள் இந்திய இறையாண்மைக்கு கேடு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதால் காலிஸ்தான் அமைப்பு இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. இந்தியாவில் இருந்து காலிஸ்தானிய ஆதரவாளர்கள் கனடா போன்ற வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று, அங்கு குடிமகன்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

இதனிடையே, காலிஸ்தானுக்கு ஆதரவாகப் பல வழக்குகளில் இந்திய அரசால் தேடப்பட்டு வந்த 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2023 ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார். வான்கூவர் புறநகர்ப் பகுதியில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் முகமூடி அணிந்து, துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. Fuel Tanker Explodes: வெடித்துச் சிதறிய எரிபொருள் டேங்கர்; 140 பேர் உடல் சிதறி பரிதாப பலி.! நைஜீரியாவில் பெரும் சோகம்.!

இந்த விவகாரம் முற்றிய நிலையில், தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்ற இந்தியா, கனடா நாட்டு தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற்றியது. இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, கனடாவின் வெளிநாட்டு தலையீடு தொடர்பான விசாரணை ஆணையத்தில் ட்ரூடோ ஆஜரானார். அப்போது, நிஜ்ஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்புள்ளது என்பதற்கான உளவு தகவலை மட்டுமே, இந்திய அரசுடன் பகிர்ந்துகொண்டதாகவும் இந்தியாவின் தொடர்புக்கான ஆதாரங்கள் எதையும் பகிர்ந்துகொள்ளவில்லை எனவும் கூறினார்.

நிஜ்ஜார் கொலையின் மூலம் இந்தியா, கனடாவின் இறையாண்மையை மீறிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். மோடி அரசுக்கு எதிரான கனடா நாட்டவர்களின் விவரங்கள் இந்தியாவிற்கு பகிரப்படுவதாவும், பின்னர் அந்த விவரங்கள் லாரான்ஸ் பிஷ்னோய் கும்பல் போன்ற கிரிமினல் கும்பல்களுக்கு செல்வதாகவும் ட்ரூடோ தெரிவித்தார். இந்த நிலையில் கனடா காவல்துறையோ, இந்தியச் சிறையிலுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கேங் உடன் இணைந்து இந்திய தூதரக அதிகாரிகள், கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகக் பகீர் கிளப்பியிருக்கிறது.