Nigeria Oil Tanker Explodes (Photo Credit: @Weathermonitors X)

அக்டோபர் 17, அபுஜா (World News): ஆப்பிரிக்காவில், நைஜீரியா (Nigeria Fuel Tanker Explodes) நாட்டில் நிலவி வரும் பஞ்சம், உள்நாட்டு குழப்பம் போன்றவற்றால் அந்நாட்டு மக்கள் மிகவும் கஷ்டமான நிலையில் இருக்கிறார்கள். பலரும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அகதிகளாகவும் இடம்பெயருகின்றனர். எரிபொருள் விநியோகத்தில் உள்ள பிரச்சனை காரணமாக, அவ்வப்போது அங்குள்ள மக்கள் எரிபொருள் டேங்கர் லாரிகள் விபத்தில் சிக்கும்போது, அந்த வாகனங்களில் எரிபொருளை திருடவும் செய்கின்றனர். World Food Day 2024: "பசி வந்தால் பத்தும் பறந்து போகும்" உலக உணவு தினம்..!

டேங்கர் வெடித்துச்சிதறி சோகம்:

இவ்வாறான தருணத்தில் எரிபொருள் டேங்கர் திடீரென வெடித்துச்சிதறி மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழக்கும் சோகம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், நைஜீரியவில் உள்ள வடக்குப்பகுதியில் அமைந்திருக்கும் ஜிகவா மாகாணம், மஜியா நகரில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த எரிபொருள் டேங்கர் ஒன்று சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த தகவலை அறிந்த மக்கள் பலரும், எரிபொருளை பிடிக்க முயற்சித்ததாக தெரியவருகிறது.

140 பேர் பரிதாப பலி:

அப்போது திடீரென எரிபொருள் டேங்கர் வெடித்துச் சிதறவே, அங்கு கூடியிருந்த சுமார் 140 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உடல் சிதறியும், தீயில் குறுகியும் பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்த விசாரணையும் நடந்து வருகிறது. எரிபொருள் டேங்கர் வெடித்ததும், சில அடிகள் தொலைவில் இருந்தவர்கள் தலைதெறிக்க ஓடி உயிரை காப்பாற்றி இருக்கின்றனர்.

உடல் கரிக்கட்டைபோல கிடைக்கும் சடலங்களை மீட்கும் அதிகாரிகள்:

எரிபொருள் ஏற்றிவந்த லாரி வெடித்து விபத்திற்குள்ளான காணொளிகள்: