Minor Girl Dies in Accident: ஸ்கூட்டி மீது லாரி மோதி பயங்கர விபத்து; சாலையை கடக்கும்போது சோகம்.. சிறுமி பரிதாப பலி.!
பெற்றோர் பிள்ளைகளின் நலன் கருதி செயல்படுவது சாலச்சிறந்தது.
மே 02, நொய்டா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் நேற்று காலை என்டிபிசி தாத்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இருசக்கர வாகனத்தில் (Truck Two Wheeler Hits Rider Died) சென்று கொண்டு இருந்தார். அச்சமயம் சிறுமி தனது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயற்சித்த போது, அவ்வழியாக வந்த கனரக லாரி மோதிய விபத்தில் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். Pushpa 2 The Rule First Single: "புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா ராஜ்.." புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு..!
இருதரப்பு வாக்குவாதத்தால் சர்ச்சை: உடனடியாக இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டது. சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் உள்ளூர் மக்கள் லாரி ஓட்டுநருக்கு எதிராக குரல் எழுப்பி, காவல்துறையினர் இடையே வாக்குவாதம் செய்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், இது தொடர்பான மிரட்டல் விடுத்த நபர்களை காவல்துறையினர் கேமராவில் பதிவு செய்து தற்போது அவர்களையும் விசாரித்து வருகின்றனர். மக்கள் லாரி ஓட்டுனருக்கு எதிராக பேசிய அதே வேளையில், உள்ளூரில் ஒருசில நபர்கள் லாரி ஓட்டுனருக்கு ஆதரவாக காவலர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
காவல்துறையினர் அறிவுரை: 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களை வாகனங்கள் இயக்க அனுமதிக்க கூடாது என்பது இந்தியாவில் சட்டமாக உள்ள நிலையில், வயது குறைந்தோருக்கு வாகனங்களை வழங்கி விபரீத நடவடிக்கை எடுக்க வேண்டாம் காவல் துறையினர் கோரிக்கை முன்வைக்கின்றனர்.