Sharath Jois: இந்திய வம்சாவளி யோககுரு சரத் ஜோயிஸ் காலமானார்; மலையேற்றத்தில் மாரடைப்பால் நடந்த சோகம்?.

அவரின் மறைவு யோகா பின்தொடர்பாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sharath Jois (Photo Credit: Instagram)

நவம்பர் 13, வர்ஜீனியா (World News): கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் பகுதியைச் சேர்ந்த யோகா கலை ஆசிரியர் கிருஷ்ணா பட்டாபி ஜோயிஸ். இவர் அஷ்டாங்க யோகா கலை நிபுணர் ஆவார். இவரின் மறைவுக்கு பின்னர், யோகா கலையை தாத்தாவின் வழியில் கற்றறிந்து, இன்று உலகளவில் மிகப்பெரிய பிரபலமாக இருந்தவர் சரத் ஜோயிஸ் (Sharath Jois). தற்போது 53 வயதாகும் ஜோயிஸ், அமெரிக்காவில் அங்குள்ள மக்களுக்கு யோகாவை பயிற்றுவித்து வந்தார்.

மலையேற்றத்தின்போது மரணம்:

நேற்று முன்தினம் அவர் வெர்ஜினியா மாகாணத்தில் இருக்கும் மக்களுக்கு அவர் யோகா கற்றுக்கொடுத்த நிலையில், அங்கு மலையேற்றம் ஒன்றுக்கு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு பலியானதாக தெரியவருகிறது. தீவிர உடல்நலக்குறைவு அடைந்தவரின் உடலை மீட்ட சக குழுவினர், அவரை மருத்துவமனையில் அனுமதி செய்தபோது மரணம் உறுதி செய்யப்பட்டது. Kodaikanal: கொடைக்கானல் செல்ல திட்டமா? மாவட்ட நிர்வாகம் அதிரடி தடை.. காரணம் என்ன? விபரம் உள்ளே.! 

உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு:

உலகளவில் அஷ்டாங்க யோகாவை பயிற்றுவித்து வந்த ஜோயிஸ், டிசம்பர் மாதம் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. நவம்பர் மாதம் டெக்ஸாஸ், பின் எதிர்வரும் ஆண்டில் சிட்னி மற்றும் துபாய் நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரின் மரணம் ஏற்பட்டுள்ளது. சரத் ஜோயிஸின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவை நிறைவு பெற்றதும் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

குடும்பத்தினர் சோகம்:

சரஸ்வதி ஜோயிஸ் - ரங்கசாமி தம்பதியின் மகனான சரத் ஜோயிஸ், சிறுவயதில் இருந்து அவரின் தாத்தாவை பார்த்து யோகாவை முறைப்படி கற்றுக்கொண்டுள்ளார். இவருக்கு சுருதி ஜோயிஸ் என்ற மனைவி, சம்பவ் ஜோயிஸ் என்ற மகன், ஷ்ரத்தா ஜோயிஸ் என்ற மகள் இருக்கின்றனர். இதனிடையே, அவர் தனது 53 வயதில் காலமானார். சரத் ஜோயிஸின் மறைவு, அவரின் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சரத் ஜோயிஸ் அமெரிக்காவில் பிரபல நடிகை & பாடகியான மடோனாவுக்கும் யோகா பயிற்றுவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விர்ஜினியாவில் யோகா நிகழ்ச்சியில் இறுதியாக கலந்துகொண்டபோது:

 

View this post on Instagram

 

A post shared by 𝙎𝙝𝙖𝙧𝙖𝙩𝙝 𝙅𝙤𝙞𝙨, 𝙋𝘼𝙍𝘼𝙈𝘼𝙂𝙐𝙍𝙐 (@sharathjoisr)

யோககுரு மரணத்திற்கு வருத்தம் தெரிவித்து பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by SONIMA (@livesonima)



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif