நவம்பர் 13, கொடைக்கானல் (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் (Kodaikanal), மலைகளின் இளவரசியாக போற்றப்படுகிறது. இங்கு ஏராளமான உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக வார இறுதி நாட்கள், பண்டிகை விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரி, குறிஞ்சி ஆண்டவர் கோவில், கொடைக்கானல் நட்சத்திர ஏரி, குணா குகை, வெள்ளி அருவி, கும்பக்கரை அருவி, பூம்பாறை மலைக்கிராமம் உட்பட பல இடங்களுக்கு மக்கள் சென்று வருவார்கள். School Girl Sexually Harassed: தந்தை-மகனாக சிறுமிகளிடம் அத்துமீறிய தந்தை-17 வயது மகன்.. உடந்தையாக தாய்.. கரூரில் பகீர்.!
மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு:
இதனிடையே, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கொடைக்கானலுக்கு சுற்றுலா உட்பட பிற தேவைக்காக இயக்கப்படும் வாகனங்கள் 12 மீட்டர் (Long Vehicles Banned in Kodaikanal) நீளத்திற்கு மேல் இருக்கக்கூடாது. 12 மீட்டருக்கு மேல், நீண்ட சேசிஸ் கொண்ட சரக்கு & பயணிகள் வாகனங்கள் வரும் நவம்பர் 18, 2024 க்கு மேல் செல்ல அனுமதி கிடையாது. 12 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட வாகனங்களே மலைப்பாதை வழியாக கொடைக்கானல் செல்ல அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 மீ நீளத்திற்கு அதிகம் கொண்ட வாகனங்களுக்கு தடை:
பொதுமக்கள் பாதுகாப்பு கருத, மலைப்பாதையில் செல்லும் வாகனங்களுக்கு இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், நவம்பர் 18ம் தேதி முதல் அதிக நீளம் கொண்ட வாகனங்கள் சுற்றுலாப்பயணிகளையோ, சரக்குகளையோ ஏற்றி வந்தால், மலைப்பாதையின் தொடக்கப்புள்ளிவரை மட்டுமே அனுமதிக்கப்படும். அதற்கு மேலாக செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.