No Confidence Motion Discussions: அனல் பறக்கும் விவாதங்களும், நாகரீகமற்ற செயல்பாடுகளும்.. பாரளுமன்றம் பராக்..!
அதன் தொடர்ச்சியாக இன்று மூன்றாவது நாளாக மக்களவையில் காரசாரமான விவாதங்கள் நடைபெறுகின்றன.
ஆகஸ்ட் 10, இந்தியா (INDIA): கடந்த இரண்டு நாட்களாக மக்களவையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா (I.N.D.I.A) கூட்டணிக்கும் பிஜேபி தலைமையிலான என்.டி.ஏ (NDA)-விற்கும் இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது. மணிப்பூர் விவகாரம் நாட்டையே கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், ஆளும் கட்சி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் மக்களவையில் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.
அப்போது, எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதனை எதிர்த்து பா.ஜ.க எம்பிக்களும் மத்திய அமைச்சர்களும் கோஷங்களை எழுப்பினர். அவர் பேசிய போது பாரதமாதா கொலை, தேச துரோகம், இந்தியா கொல்லப்பட்டது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார். அதனால் ராகுல் காந்தி பேசிய பெரும்பாலான வார்த்தைகள் அவை குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. Unchanged Repo Rates:மாற்றமின்றி தொடரப் போகும் ரெப்போ வட்டி விகிதம் -ஆர்பிஐ அறிவிப்பு
இதற்கிடையே நேற்று ராகுல் காந்தி பேச்சை முடித்துவிட்டு கிளம்பும்போது பாஜக எம்பிக்களை நோக்கி ஃப்ளையிங் கிஸ் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். அவரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் பலத்த கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும், இந்த நம்பிக்கையில்லா தீர்மான விவகாரம் குறித்து பல்வேறு முக்கிய தலைவர்கள் உரையாற்றுகின்றனர். இன்று நிர்மலா சீதாராமன் பேசுகையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டமைப்பிற்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதித்தொகை விவரத்தை தெரிவித்தார். அதனை பொருட்படுத்தாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.