RBI Governor Shaktikanta Das (Photo Credit: @ANI Twitter)

ஆகஸ்ட் 10, இந்தியா (INDIA):  இன்னும் சில நாட்களில் இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில், இன்று ரிசர்வ் வங்கி இரண்டு மாத நிதி கொள்கை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக உலக பொருளாதாரம் சரிவை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியா  நிலையான  பொருளாதார  வளர்ச்சியை அடைந்திருக்கிறது. மேலும் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்து உலக பொருளாதாரத்திற்கு 15 சதவீதம் பங்களித்துள்ளது. மேலும் பண வீக்கத்தை கட்டுக்குள் வைத்து வங்கிகளின் முதலீடுகளை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது.

மூன்று நாட்கள் நடைபெற்ற விரிவான விவாதத்திற்கு பிறகு மத்திய வங்கி ரெப்போ சதவீதத்தை 6.5% ஆக உறுதி செய்துள்ளது. இது ஆறு பேர் கொண்ட நிதி கொள்கை குழுவின் (Monetary Policy Committee) ஒருமனதான தீர்மானம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர்  சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானம் அன்றாட தேவைகளுக்காக  வங்கிக் கடன் செலுத்துபவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மேக்ரோ  நிறுவனங்களின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டும் நாட்டின் நிலையான  வளர்ச்சி தொடர்வதற்காகவும் இந்த முடிவு  எடுக்கப்பட்டதாக ஆர்.பி.ஐ (Reserve Bank of India) அறிவித்திருக்கிறது.