PM Modi Wish on Donald Trump: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப்; நண்பருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.!

"அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே" என்ற முழக்கத்துடன் வெற்றி அடைந்த டொனால்ட் டிரம்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

Donald Trump with PM Narendra Modi (Photo Credit: @NarendraModi X)

நவம்பர் 06, புதுடெல்லி (New Delhi): அமெரிக்காவில் 47 வது அதிபர் (US Presidental Election Results 2024) தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நவம்பர் 05ம் தேதியான நேற்று நடைபெற்று, இன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டன அதன்படி, டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீண்டும் அதிபர் தேர்தலில் வெற்றி அடைந்து, அந்நாட்டின் 47 வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்கிறார். கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று, பின் 2020 தேர்தலில் தோல்வியை தழுவிய ட்ரம்ப், 2024ல் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார். அந்நாட்டில் இரண்டு முறை ஒரு நபர் அதிபராக பொறுப்பேற்க முடியும் என்ற நிலையில், டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றுள்ளார். US Presidental Election Results: வெற்றிக்கனியை சுவைத்தார் டொனால்ட் ட்ரம்ப்; கடும் போட்டியில் வெற்றி சாத்தியமானது எப்படி?.. 

அமெரிக்கர்கள் ஒன்றுசேருங்கள்:

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸ் (Kamala Harris), குடியரசுக்கட்சியின் சார்பில் டொனால்ட் ட்ரம்ப் "அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அமெரிக்கர்கள் ஒன்றுசேருங்கள்" என தனது பிரச்சாரத்தை முன்வைத்தார். அவரின் வாதங்கள் ஈடுபட்டு, 270 க்கும் அதிகமான எலக்ட்டோரால் வாக்குகளை பெற்று வெற்றி அடைந்துள்ளார். இதனால் அமெரிக்க தேர்தல் வரலாற்றில், மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிய தேர்தலில் ட்ரம்ப் வெற்றி அடைந்து, அங்குள்ள மக்களின் மனவோட்டத்தை பிரதிபலித்து இருக்கிறார்.

PM Narendra Modi with Donald Trump (Photo Credit: @NarendraModi X)

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து:

இந்நிலையில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்புக்கு உலகளவில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் (PM Narendra Modi) தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே. உங்களின் வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. உங்கள் முந்தைய பதவிக் காலத்தின் வெற்றிகளை நீங்கள் கட்டியெழுப்பும்போது, ​​இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எங்கள் ஒத்துழைப்பைப் புதுப்பிக்க நான் காத்திருக்கிறேன். ஒன்றாக, நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் பாடுபடுவோம்" என கூறியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்-பை வாழ்த்தி பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் வலைதளபதிவு: