PM Modi France Visit: அரசுமுறை பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி; பிரான்ஸ் அதிபருடன் பேச்சுவார்த்தை.!
நாளை (ஜூலை 14, 2023) பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் கௌரவ விருந்தினராகவும் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.
ஜூலை 13, புதுடெல்லி (New Delhi): இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று அதிகாலை டெல்லியில் இருந்து பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசுக்கு புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு இருப்பது சர்வதேச அளவில் கவனத்தை பெறுகிறது.
ஜூலை 14ம் தேதியான நாளை பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் கௌரவ விருந்தினராகவும் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இந்த பயணத்தின்போது பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரெஞ்சு உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடும் நிகழ்வும் நடைபெறுகிறது. Namakkal Suicide: திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்த விவகாரம்; கடன் தொல்லையால் நடந்த விபரீதம்.. அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
அதேபோல, பிரதமர் நரேந்திர மோடி பிரான்சில் வசித்து வரும் இந்திய மக்களிடையையே உரையாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய உயர் அதிகாரிகளுடனும் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார். தொழில் முதலீடுகளும் இந்தியாவுக்கு ஈர்க்க திட்டமிட்டுள்ளன.