Modi Cabinet 3.0 Announcement: மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற நபர்களும், ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகளும்.. முழு விபரம் இதோ.!
இந்தியாவை நிர்வகிக்கும் பல்வேறு துறைகளில் இடம்பெற்ற நபர்களின் விபரங்களை தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஜூன் 10, டெல்லி (New Delhi): 2024 இந்தியா தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடைந்து, மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக ஒருமனதாக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டு, அதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 1962க்கு பின் தொடர்ந்து மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பை தொடர்ந்து, அமைச்சர்கள் குறித்த அறிவிப்பும், இலாகா பிரிவுகளும் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அமைச்சர்களும் - அவர்களின் துறையும் பின்வருமாறு.,
மத்திய அமைச்சர்கள்:
1) நரேந்திர மோடி - பணியாளர்கள் பொதுமக்கள் குறைகள் தீர்க்கும் அமைச்சகம், ஓய்வூதியத்துறை, அணுசக்தி துறை, விண்வெளித்துறை, அரசின் கொள்கைமுடிவுகளுக்கான துறை, அமைச்சர்கள் & தனிப்பொறுப்பு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படாத துறைகள் அனைத்தும் பிரதமரின் மேற்பார்வையில் இயங்கும் துறைகள்,
2) ராஜ்நாத் சிங் - பாதுகாப்புத்துறை
3) அமித் ஷா - உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை
4) நிதின் கட்கரி - போக்குவரத்து & நெடுஞ்சாலைத்துறை
5) ஜெபி நட்டா - சுகாதாரம் & குடும்ப நலத்துறை, ரசாயனம் உரங்கள் துறை
6) சுராஜ் சிங் சௌஹான் - வேளாண்மை துறை, விவசாயிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை
7) நிர்மலா சீதாராமன் - நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை
8) ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை
9) மனோகர் லால் - வீட்டுவசதி & நகர்ப்புற வசதித்துறை, மின்சாரத்துறை
10) எச்.டி குமாரசாமி - கனரக தொழிற்துறை, எஃகு துறை
11) பியூஸ் கோயல் - வர்த்தகத்துறை, தொழித்துறை
12) தர்மேந்திர பிரதான் - கல்வித்துறை
13) ஜித்தன்ராம் மாஞ்சி - குறு-சிறு,நடுத்தர தொழில்கள் துறை
14) லாளன் ஸ்ரீ ராஜன் சிங் - பஞ்சாயத்து ராஜ் துறை மீன்வளத்துறை, பால்வளத்துறை
15) சார்பானந்தா சோனோவால் - துறைமுகங்கள் துறை, கப்பல் போக்குவரத்து துறை, நீர்வழித்துறை
16) வீரேந்திர குமார் - சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
17) ராம்மோகன் நாயுடு - விமான போக்குவரத்துத்துறை
18) பிரகலாத் ஜோஷி - நகர்வோர் விவகாரங்கள் துறை, உணவு & பொதுவிநியோகத்துறை, புதிய எரிசக்தி - புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை
19) ஜுவல் ஓரம் - பழங்குடியினர் நலத்துறை
20) கிரிராஜ் சிங் - ஜவுளித்துறை
21) அஸ்வினி வைஷ்ணவ் - ரயில்வேத்துறை, தகவல் & ஒளிபரப்புத்துறை
22) ஜோதிராதித்ய சிந்தியா - தகவல் தொடர்பு (ஐடி) துறை, வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி துறை
23) புபேந்தர் யாதவ் - சுற்றுசூழல், வனம், பருவநிலை மாற்றம் துறை
24) கஜேந்திர சிங் செகாவத் - கலாச்சாரம் & சுற்றுலாத்துறை
25) அன்னபூரணா தேவி - பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு துறை
26) கிரண் ரிஜிஜூ - பாராளுமன்ற விவகாரங்கள் துறை, சிறுபான்மையினர் நலத்துறை
27) ஹர்தீப் சிங் பூரி - பெட்ரோலியம் & இயற்கை எரிவாயுத்துறை
28) மன்சூக் மாண்டவியா - தொழிலாளர் & வேலைவாய்ப்பு துறை, இளைஞர் நலன் & விளையாட்டுத்துறை
29) கிஷன் ரெட்டி - நிலக்கரி & சுரங்கத்துறை
30) சிராஜ் பஸ்வான் - உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை
31) சி.ஆர் பாட்டில் - நீர்வளத்துறை @ ஜல்சக்தி துறை
தனிப்பொறுப்பு அமைச்சர்கள் (பிரதமரின் நேரடி கண்காணிப்பில்):
1) ராவ் இந்திரஜித் - புள்ளியியல் திட்ட அமலாக்கத்துறை, கலாச்சார ராஜாங்க துறை
2) ஜிதேந்திர சிங் - அறிவியல் & தொழில்நுட்பத்துறை, புவி அறிவியல் அமைச்சகம், இணை அமைச்சராக பணியாளர்கள் & ஓய்வூதிய குறைகள் தீர்ப்பு, அணுசக்தி துறை, விண்வெளித்துறை
3) அர்ஜுன் ராம் மேக்வால் - சட்டம் & நீதித்துறை, இணை அமைச்சராக நாடாளுமன்ற விவகாரங்கள்
4) ஜாதவ் பிரதாப் ராவ் - ஆயுஷ் அமைச்சக துறை, சுகாதாரம் & குடும்ப நலத்துறை
5) ஜெயந்த் சௌதாரி - திறன் மேம்பாடு & தொழில் முனைவோர் துறை, ராஜாங்க அமைச்சராக கல்வித்துறை
இணை அமைச்சர்கள்:
1) எல்.முருகன் - தகவல் & ஒளிபரப்புத்துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை
2) அஜய் - சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைத்துறை
3) சஞ்சய் குமார் - உள்துறை
4) கமலேஷ் பஸ்வான் - ஊரக வளர்ச்சித்துறை
5) பகிராஜ் சௌதாரி - வேளாண் & விவசாயிகள் நலத்துறை
6) சதிஷ் சந்திரதுபே - நிலத்தடி அமைச்சகம் துறை
7) சஞ்சய் சேத் - பாதுகாப்புத்துறை
8) துர்கா தாஸ் - பழங்குடியினர் நலத்துறை
9) ரக்சா நிகில் - இளைஞர் விவகாரம் & விவகாரத்துறை
10) சுகுந்தா மசுந்தர் - கல்வித்துறை, வடகிழக்கு மாநிலங்கள் 11) வளர்ச்சித்துறை
11) சாவித்ரி தாகூர் - பெண்கள் & குழந்தைகள் நலத்துறை
12) மோகன் தியாகு - வீட்டு வசதி வளர்ச்சித்துறை & நகர்ப்புற மேம்பாடு துறை
13) ராஜ் பூஷன் சௌதாரி - ஜல்சக்தி துறை
14) பூபதி ராஜு - கனரக தொழிற்துறை
15) ஜார்ஜ் புரியன் - சிறுபான்மையினர் நலத்துறை, மீன்பிடி & கால்நடை பராமரிப்பு துறை
16) பவித்ரா மற்கரிதா - வெளியுறவுத்துறை, ஜவுளித்துறை
17) சுகுந்தா மஜூந்தார் - கல்வித்துறை
18) கீர்த்தி வரதன் சிங் - சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம் துறை
19) சோபா கல்பாஸ் - குறுசிறு, நடுத்தர தொழில் துறை,
20) சந்திரசேகர் - ஊரக வளர்ச்சித்துறை, தகவல் தொடர்புத்துறை
21) சோமண்ணா - நீர்வளத்துறை
22) நித்யானந்தா ராய் - உள்துறை
23) ராம்தாஸ் அத்வாலே - சமூகநீதி & அதிகாரமளித்தல் துறை
24) நிதின் பிரதேஷ் - வர்த்தகத் துறை, மின்னணு தகவல் துறை