Doctor Rape And Murder Case: 'நான் ராஜினாமா செய்ய தயார்...' மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு..!

மக்கள் நலனுக்காக முதலமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

West Bengal Politician Mamata Banerjee, Trinamool Congress Party (Photo Credit: ANI)

செப்டம்பர் 13, கொல்கத்தா (West Bengal News): மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும், சுமார் 1,500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இங்குள்ள மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு பயிலும் பெண் மருத்துவர் (வயது 28) கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் அவர் தூங்க சென்றார். கடந்த 9-ம் தேதி கருத்தரங்கு அரங்கில் பிணமாக மீட்கப்பட்டார். இவரை பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறார்கள். பிரேத பரிசோதனையில், பெண்ணின் அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததிருக்கின்றன.

மருத்துவர் கொலை: இந்த வழக்கில் (Doctor Rape And Murder) முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் சஞ்சய் ராய். கைது செய்யப்பட்ட இவர், விசாரிக்கப்பட்டு வருகிறார். சஞ்சய் ராயுக்கு 4 முறை திருமணம் நடந்துள்ளதாகவும் அவரின் மோசமான நடத்தை காரணமாக 3 மனைவிகள் விட்டு சென்றதகாகவும், நான்காவது மனைவி புற்றுநோயால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது செல்போனை ஆய்வு செய்தபோது இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொண்ட ஏராளமான வீடியோக்கள் இருந்தன. மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மேற்குவங்கம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 34-வது நாளாக நேற்றும் நீடித்தது. PM Modi Meets Paralympic Medallists: பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியினர்.. பிரதமர் நரேந்திர மோடி உடன் சந்திப்பு..!

பேச்சுவார்த்தை: இதையடுத்து, கடந்த 11-ம் தேதி மாலை 6 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் களுக்கு மாநில தலைமைச் செயலர் மனோஜ் பந்த் அழைப்பு விடுத்தார். இதில் 15 பேர் வரை பங்கேற்கலாம் என்று கூறியிருந்தார். இத்தகைய சூழலில், தலைமைச் செயலகத்தில் இன்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நேரலை ஒளிபரப்புக்கு அரசு மறுத்ததால் பயிற்சி மருத்துவர்கள் தரப்பில் யாரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை. கூட்ட அரங்கில் சுமார் 2 மணி நேரம் வரை முதல்வர் மம்தா (Mamata Banerjee) காத்திருந்தும், அவர்கள் யாரும் வரவில்லை.

மம்தா பானர்ஜி அறிவிப்பு: இதற்கு பின் செய்தியாளர்களிடம் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது, "பெரும்பாலான மருத்துவர்கள் பேச்சுவார்த்தையில் ஆர்வமாக இருக்கின்றனர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஒரு சிலரே இதற்கு முட்டுக்கட்டைப் போட விரும்பினர் என்பது எங்களுக்குத் தெரியவந்துள்ளது. இங்குள்ள எதிர்க்கட்சியினருக்கு நீதி தேவை இல்லை. பதவிதான் வேண்டும். மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் நான் தயாராக இருக்கிறேன். பதவியைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எனக்கு நீதிதான் வேண்டும். நீதியைப் பற்றி நான் மட்டுமே கவலைப்படுகிறேன். போராட்டம் முடிவுக்கு வராததால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்காக மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். மக்கள் நலனுக்காக நான் முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார்" என்றார்.