PM Narendra Modi meets Paralympic medallists (Photo Credit: @ANI X)

செப்டம்பர் 12, புதுடெல்லி (Sports News): பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் (Paris) நடைபெற்ற பாராலிம்பிக் (Paralympics) போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கி நேற்று (செப்டம்பர் 09) நிறைவு பெற்றது. இதில், 168 நாடுகளை சேர்ந்த 4,400 மாற்றுத்திறனாளி வீரர்கள் சாதித்தனர். இந்தியா சார்பில் 84 பேர், 12 வகையான போட்டிகளில் பங்கேற்றனர். தடகளம், துப்பாக்கி சுடுதல், பாட்மின்டன், வில்வித்தை, ஜூடோ என 5 போட்டிகளில் அசத்திய வீரர்கள் மொத்தம் 29 பதக்கங்களை வென்றனர். பாரிஸ் பாராலிம்பிக்கில் 7 தங்கம் உட்பட மொத்தம் 29 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 18-வது இடத்தை பிடித்தது. South Asian Junior Athletics Championship 2024: தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி; தமிழக வீராங்கனை அபிநயா தங்கம் வென்று சாதனை..!

பாரா ஒலிம்பிக்ஸ் வீரர்கள் அனைவரும் செப்டம்பர் பத்தாம் தேதியன்று பாரிஸில் இருந்து நாடு திரும்பினர். அவர்களுக்கு அப்போது உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று பாரா ஒலிம்பிக் வீரர்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) நேரில் சந்தித்து கலந்துரையாடினார். மேலும் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, இந்திய பாராலிம்பியன்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி உடன் நேரில் சந்திப்பு: