Former MP Death Tragedy: முன்னாள் எம்.பி மஸ்தான் மர்ம மரணம் விவகாரம்; பணமோசடியால் கொலையா?.. அதிர்ச்சி திருப்பம்..!

இதனால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளாரோ என்ற அச்சமானது எழுந்துள்ளது.

Former DMK MP Masthan (Photo Credit: PTI)

டிசம்பர் 30, கூடுவாஞ்சேரி: முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் (DMK Ex MP Masthan Death Mystery) அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டு 5 பேர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளாரோ என்ற அச்சமானது எழுந்துள்ளது.

சென்னையில் உள்ள சேப்பாக்கம் (Chepauk, Chennai) பகுதியை சேர்ந்தவர் மஸ்தான். இவர் முன்னாள் எம்.பி ஆவார். மேலும், திமுகவில் சிறுபான்மையினர் உரிமை நலப்பிரிவில் செயலாளராக இருந்து வருகிறார். இவர் தனது ஆதரவாளர்களோடு கடந்த 22ம் தேதி திருச்சியை நோக்கி பயணம் செய்தார்.

அப்போது, வாகனம் கூடுவாஞ்சேரி அருகே சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த கூடுவாஞ்சேரி காவல் துறையினர், மஸ்தானின் உடலை மீட்டு அரசு இராயபுரம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். #Rishabh Pant Accident: சாலைத்தடுப்பில் மோதி தீப்பிடித்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார்.. படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..!

இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மஸ்தான் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட விவகாரம் தெரியவந்துள்ளது. இதனால் பணமோசடி விவகாரத்தில் ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் சேர்ந்து மஸ்தானை கொலை செய்தனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து, முன்னாள் எம்.பி மஸ்தானின் ஓட்டுநர் உட்பட 5 பேரிடம் காவல் துறையினர் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திமுக தொண்டர்கள் மற்றும் மஸ்தானின் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 30, 2022 12:46 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif