Hema Committee Report: கேரள சினிமாவில் பாலியல் தொல்லை.. ஆவேசத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி..!
மலையாள திரையுலகில் பரபரப்பான பாலியல் புகார்களை ஊடகங்கள் பரப்புவதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விமர்சித்துள்ளார்.
ஆகஸ்ட் 27, திருச்சூர் (Kerala News): கேரளாவில் சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியிலான பிரச்சனைகள் குறித்து விசாரிக்கக் கேரள அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிஷன் (Hema Committee) அமைத்தது. கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை (Rape) செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து மலையாள சினிமாவில் இதுபோல பல சம்பவங்கள் நடப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, இந்த விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. Bijili Ramesh: "இது தான் தவறான செயல்"; மறக்க முடியுமா அந்த நிகழ்வை?; பிஜிலி ரமேஷின் நினைவுகளை பகிரும் நெட்டிசன்கள்.!
ஹேமா கமிட்டி: இது தொடர்பான விசாரணை நடத்திய அந்தக் குழு கடந்த 2019 டிசம்பரில் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் 233 பக்க அறிக்கையை, ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் சமர்ப்பித்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த அறிக்கையை அரசு வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை கேரள அரசு வெளியிட்டது. அதில் மலையாள திரையுலகில் வாய்ப்புக்காக பெண் கலைஞர்கள் அட்ஜஸ்ட்மென்ட் என பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மோகன்லால் ராஜினாமா: இதன் பின் பல நடிகைகள், தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது கூறி வருகின்றனர். நடிகர்கள், ஜெயசூர்யா சித்திக், ரியாஸ் கான் உட்பட பலர் மீதும் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இதற்கிடையே வங்க மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பிரபல இயக்குநரும் மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பாலியல் புகார் கூறியிருந்ததால் சினிமா அகாடமி தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். ‘அம்மா’ (AMMA) அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரும் பதவியை ராஜினாமா செய்தார். இந்த ஹேமா கமிட்டி அறிக்கை மூலம் ஏற்பட்ட அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை அடுத்து, சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து மோகன்லால் ராஜினாமா செய்தார். மோகன்லால் (Mohanlal) ராஜினாமா செய்ததை தொடர்ந்து 17 செயற்குழு உறுப்பினர்களும் தங்களது பொறுப்பில் இருந்து விலகினர். Mother Kills Her 3-Year-Old Child: ஆண் நண்பருக்காக 3 வயது பெண் குழந்தையை கொன்று வீசிய தாய்; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் பயங்கரம்.!
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆவேசம்: இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து திருச்சூரில் பத்திரிகையாளர்கள் நடிகரும், அரசியல்வாதியுமான சுரேஷ் கோபியிடம் (Union Minister ) கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்ததாவது, ” பாலியல் புகார்கள் அனைத்தும் குற்றச்சாட்டு என்ற நிலையிலேயே உள்ளன. இருக்கும் இடத்தை பொறுத்து கேள்விகளை கேளுங்கள். ஊடகங்கள் சொந்த லாபத்திற்காக மக்களை ஒருவரையொருவர் சண்டையிட வைப்பது மட்டுமல்லாமல், பொதுமக்களின் கருத்தையும் தவறாக வழிநடத்துகிறீர்கள். தற்பொழுது எழுந்துள்ள புகார்கள், குற்றச்சாட்டுகளின் வடிவத்திலே உள்ளது. நீங்கள் மக்களுக்கு என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் நீதிமன்றமா? பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும், நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? சினிமா என்ற உலகை நிலை தடுமாற வைக்கிறீர்கள். நீங்கள் ஆடுகளை சண்டையிட்டு அதன் இரத்தத்தை குடிப்பது போல் இருக்கிறீர்கள். ஊடகங்கள் பொதுமக்களின் மனநிலையை தவறாக வழிநடத்துகின்றன” என்று ஆவேசமாக பதில் கூறினார்.